“இந்திய டெஸ்ட் டீம் கேப்டன் கனவு.. எனக்கு மட்டும் வித்தியாசமா நடந்தது” – அஸ்வின் பேட்டி

0
308
Ashwin

இந்திய கிரிக்கெட்டில் கிரிக்கெட் திறமைகள் தாண்டி, கிரிக்கெட்டை அரிப்பு பூர்வமாக அணுகுவதில் மிகப்பெரிய பெயர் பெற்றவர் தற்போது இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஒரு ஆடுகளம் எப்படி இருக்கிறது? அதற்கு எந்த வகையில் சுழல் பந்துவீச்சை மட்டும் அல்லாமல் வேகப்பந்து வீசையும் மாற்ற வேண்டும்? மேலும் குறிப்பிட்ட ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும்? என எல்லாவிதஆய்வுகளையும் உடனுக்குடன் செய்து சரியான முடிவுகள் எடுப்பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணி பிளேயிங் லெவனில் வெளியில் இருந்தாலும் மிக முக்கியமானவர்.

- Advertisement -

இதன் காரணமாக இவரை எல்லோரும் செல்லமாக கிரிக்கெட் சயின்டிஸ்ட் என்று கூறுவார்கள். நேற்று நூறாவது டெஸ்டில் விளையாட இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்த புஜாரா, அஸ்வினிடம் கிரிக்கெட் குறித்து பேசி வெல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். காரணம் கிரிக்கெட் குறித்து அவருடைய அறிவு மிகப் பெரியது என்று சொல்லியிருந்தார்.

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சில் மிகப்பெரிய சாதனைகளை செய்து அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், விரைவாக 500 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர், அதிகமாக ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்கின்ற பெரிய சிறப்போடு இருக்கிறார்.

இப்படி குறிப்பிட்ட கிரிக்கெட் வடிவத்தில் பெரிய திறமை மற்றும் அறிவுடன் இருந்தாலும் கூட, இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ஆகும் வாய்ப்பு அவருக்கு கடைசி வரையில் வரவே இல்லை. நாளை 100வது டெஸ்டில் விளையாடினாலும் கூட, அவருக்கு இது ஒரு மனக்குறையாகத்தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த வாழ்க்கையில், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நான் நினைத்திருக்கிறேன். என்னிடம் நிறைய பேர் வந்து உங்களுக்கு ஏன் கேப்டன் பதவி கொடுக்கவில்லை என்பது பற்றி பேசி இருக்கிறார்கள். ஆனால் எனக்கு வந்த ஏற்றத்தாழ்வுகள் எனக்கு நிறைய புரிதலை உருவாக்கி இருக்கிறது. அதிலிருந்து நான் வெளியில் வந்து என்னை சமாதானம் செய்து கொண்டு விட்டேன்.

கிரிக்கெட்டில் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த இடத்தில்தான் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நான் ஒரு தவறு செய்தால் அணியில் இல்லாமல் போவேன். ஆனால் அவர்கள் பல தவறுகள் செய்யும்பொழுதும் அணியில் தொடர்வார்கள்.

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. இந்திய அணியில் யாரும் யோசிச்சே பார்க்காத.. இதுவரை நடக்காத ஒரு மாற்றம்.. நடக்க வாய்ப்பு

எனக்கு முக்கியமான நேரங்களில் வாய்ப்புகள் கிடைக்காத பொழுது, எல்லாமே அணியின் நன்மைக்காகத்தான் என்று என்னை நானே சமாதானம் செய்வேன். ஐந்து நாட்கள் முடிவில் அணி வென்றால், ட்ரெஸ்ஸிங் ரூமில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அணியை விட என்னுடைய சுயநலமான ஆர்வத்தை பெரிதுபடுத்த முடியாது” எனக் கூறி இருக்கிறார்.