நேத்து யாரையும் கேக்காம நானே பேட்டிங் பண்ண முன்ன போயிட்டேன்.. அப்புறம்தான் – அஸ்வின் சுவாரசிய பேட்டி

0
534
Ashwin

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில், நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, நான்கு புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிடித்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் என முக்கிய மூன்று விக்கெட்டுகளை 36 ரன்கள் எடுப்பதற்குள் இழந்துவிட்டது. மேலும் பவர் பிளேவும் முடிவுக்கு வந்திருந்தது. இதன் காரணமாக பலவீனமான டெல்லி அணிக்கு எதிராக பலமான ராஜஸ்தான் அணி தோல்வி அடையும் என்கின்ற எண்ணம் உருவானது.

- Advertisement -

இந்த நிலையில் தடாலடியாக துருவ் ஜுரல் மற்றும் சிம்ரன் ஹெட்மையர் என இரண்டு முன்னணி பேட்ஸ்மேன்கள் இருக்கும்பொழுது, பேட்டிங் வரிசையில் ஐந்தாம் இடத்தில் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனுப்பப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக பேட்டிங்கில் செயல்பட்ட துருவ் ஜுரல் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் அனுப்பப்பட வேண்டும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, ஐந்தாவது இடத்தில் கூட அவரை அனுப்பாமல், ரவிச்சந்திரன் அஸ்வினை அனுப்பியது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

இந்த நிலையில் உள்ளே வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெல்லி அணி ஒன்பதாவது ஓவரில் டைம் அவுட் எடுக்கும் வரை மிகவும் அமைதியாக இருந்தார். இதற்குப் பிறகு அதிரடியாக குல்தீப் ஓவரில் ஒரு சிக்சர், அதிவேக அன்றிச் நோர்க்கியா ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் என 19 பந்துகளில் 29 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றி விட்டார்.

இது ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்தது. தேவையான நேரத்தில் சரியான ரன் ரேட் கிடைத்த காரணத்தினால், இதற்கு அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ரன் ரேட்டை இன்னும் உயர்த்துவது எளிதான விஷயமாக அமைந்தது. அவர்கள் எடுத்ததும் அதிரடியாக விளையாட முடிந்தது. மேலும் ரியான் பராக் மெதுவாக ஆரம்பித்து கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 185 ரன்கள் எடுக்க வைத்தார். இறுதியாக 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் போட்டியையும் வென்றது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி காலில் பதிரனா விழுந்ததாக பரப்பப்பட்ட பொய் செய்தி.. வெளியான உண்மை வீடியோ

இதுகுறித்து இன்று பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நாங்கள் முதல் போட்டியில் விளையாடும் பொழுது, ஒன்பது ஓவருக்குள் மூன்று விக்கெட்டுகள் விழுந்தால், என்னை பேட்டிங் செய்ய களம் இறங்க சொல்லி இருந்தார்கள். இந்த நிலையில் நான் இரண்டாவது போட்டியில் ஜாலியாக பாட்டு பாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென மூன்றாவது விக்கெட்டாக பட்லர் ஆட்டம் அழைக்க, நான் முதல் ஆட்டத்தில் சொல்லியதை வைத்து உள்ளே சென்று விட்டேன். கொஞ்ச தூரம் உள்ளே சென்று திரும்பி பார்த்தால், அடுத்து யாரை அனுப்புவது என தீவிரமாக சங்கக்கரா ஆலோசனை செய்து கொண்டிருந்தார். கடைசியில் நான் அப்படியே நிற்க என்னை பார்த்து அவர் ‘ போ போ நீதான் விளையாட வேண்டும் போ’ என்றார். பின் நான் சென்று விளையாடினேன்” என்று கூறியிருக்கிறார்.