தோனி காலில் பதிரனா விழுந்ததாக பரப்பப்பட்ட பொய் செய்தி.. வெளியான உண்மை வீடியோ

0
201
Dhoni

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பவுலிங் யூனிட்டுக்கு இலங்கையின் இளம் வலதுகை வேகபந்துவீச்சாளர் மதிஷா பதிரனா மிக முக்கியமான பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் நியூசிலாந்தின் ஆடம் மில்னே வேகப்பந்துவீச்சாளராக வாங்கப்பட்டார். அந்த ஆண்டு அவர் காயத்தால் விளையாடாத பொழுது, மதிஷா பதிரனாவுக்கு மாற்று வீரராக இடம் கிடைத்தது.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இதில் ஸ்டெம்ப்புகளுக்கு பின்னால் இருந்து தோனி இவரது பந்துவீச்சை பார்த்த பொழுது, இவரது ரிலீஸ் பாயிண்ட் மிகவும் தாழ்வாக இருக்கின்ற காரணத்தினால், இவரது பந்துவீச்சை கணித்து விளையாட பேட்ஸ்மேன்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தார். இதன் காரணமாக 2023 ஆம் ஆண்டு இவரை சிஎஸ்கே அணி 20 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

தற்பொழுது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயத்தால் ஆர்சிபி அணிக்கு எதிரான முதல் போட்டியை பதிரனா தவறவிட்டார். இதற்கு அடுத்து இலங்கையில் இருந்து சிஎஸ்கே அணியுடன் வந்து இணைந்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இவர் அபாயகரமான டேவிட் மில்லர் விக்கெட்டையும் கைப்பற்றினார். சிஎஸ்கே அணி அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இவர் தோனியின் நேரடி கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வரும் வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய குடும்பத்தினர் தோனியிடம் தன் மகனை ஒப்படைத்து பார்த்துக் கொள்ளும்படி கூறியது கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது. தோனியும் பதிரனா எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று அவரது குடும்பத்தினருக்கு வாக்கு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சிஎஸ்கே போட்டியின் பொழுது பந்து வீசுவதற்கு முன்பாக தோனியின் கால்களில் விழுந்து பதிரனா ஆசீர்வாதம் வாங்கினார் என்கின்ற ஒரு வீடியோ பரவியது. இதைப் பல சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் உருக்கமாக பதிவிட்டு வந்தார்கள். ஆனால் உண்மையில் பதிரனா தோனியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவில்லை என்கின்ற உண்மை வீடியோ வெளிவந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் கனவுல கூட வீழ்த்த நினைத்த அணி பெங்களூருதான்.. ஏன்னா அவங்க எண்ணம் அப்படி – கம்பீர் பேட்டி

குறிப்பிட்ட அந்த போட்டியில் ஓவர்களுக்கு இடைவெளியில் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பர் பாயிண்டில் நின்று கொண்டிருக்க, அந்த இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் பந்துவீச்சை துவங்குவதற்கான அடையாளம் விடும் வெள்ளை நிற அட்டையில் பவுலிங் மார்க்கர் கிடந்தது. அதை பதிரனா கீழே குனிந்து எடுத்தார். இந்த நிகழ்வை தான் வேறொரு வீடியோவில் அவர் தோனியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் என்று தவறாக பரப்பப்பட்டிருந்தது. தற்பொழுது இந்த வீடியோவின் மூலம் உண்மை வெளிவந்திருக்கிறது.