“இப்ப இந்திய அணியில் இவருக்கு நான் பெரிய ரசிகன்.. 2005 சம்பவம் ஞாபகத்துக்கு வருது” – அஸ்வின் பேட்டி

0
87
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது இந்தியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் யாரும் எதிர்பார்த்ததை விட மிக அதிகமான சுவாரசியத்தை உள்ளடக்கி சென்று கொண்டிருக்கிறது.

2022 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் வேகத்தில் இங்கிலாந்து அணிக்கு எல்லோரையும் அதற்குள் ஈர்த்து கொண்டு வந்தது. மேலும் ஆசிய நாடான பாகிஸ்தான் வந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது.

- Advertisement -

இதன் காரணமாக சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் இங்கிலாந்து அணி எப்படி செயல்படும் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இங்கிலாந்தின் தைரியம் இந்திய பந்துவீச்சாளர்களிடம் இந்தியாவில் எடுபடுமா? என்பதுதான் சுவாரசியத்தின் மையப் புள்ளியாக இருந்தது.

இந்த நிலையில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக முதல் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் பாஸ்பால் முறையில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை வெல்ல வைத்து ஆச்சரியப்படுத்தினார்.

இதன் காரணமாக எதிர்பார்ப்புகள் அப்படியே இந்திய அணியின் பக்கமாக மாறியது. இரண்டாவது போட்டியில் திரும்ப வந்த இந்திய அணி போட்டியை வென்று தொடரை சமன் செய்து இன்னும் எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. காரணம் இரண்டாவது போட்டியை அனுபவம் இல்லாத வீரர்களை வைத்து இந்திய அணி வென்றது.

- Advertisement -

தற்போது இந்த தொடரில் ஒரு வீரராக விளையாடும் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுகுறித்து கூறும் பொழுது “உண்மையான ஷோ ஸ்டீலராக பூம்பால்தான் இருந்தது. பும்ரா அசாதாரணமாக பந்துவீசி அசத்தியிருக்கிறார். தற்பொழுது அவரை அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும், டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்திலும் இருக்கிறார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். இது இமாலய சாதனையாகும்.

சுப்மன் கில்லின் திறமை பற்றி எந்த சந்தேகமும் கிடையாது. அவர் இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் திரும்ப வந்தது மிகவும் சிறப்பாக இருந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் நான்காவது நாளுக்கு வந்தோம். அப்பொழுது இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. ஆனால் அசாதாரணமான அதிர்வு, ஆற்றல் மற்றும் அணியின் செயல் திறன் தொடரைசமன் செய்ய உதவியது.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் ஸ்டார் ஷாமர் ஜோசப் 2024 ஐபிஎல் ஒப்பந்தம்.. எந்த அணிக்கு தெரியுமா?

2005 ஆம் ஆண்டு உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து ஒரு பரபரப்பான ஆசஸ் தொடரை விளையாடியது. நான் அந்தத் தொடரை மிகவும் விரும்பி பார்த்தேன். இந்தத் தொடரிலும் அதே உற்சாகமான உணர்வை பெறுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.