வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் ஸ்டார் ஷாமர் ஜோசப் 2024 ஐபிஎல் ஒப்பந்தம்.. எந்த அணிக்கு தெரியுமா?

0
202
Shamar

தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் 24 வயதான வலது கை வேத பந்துவீச்சாளர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேன் ஷாமர் ஜோசப்தான்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த நாட்டில் மோதியது. கடைசியாக அந்த அணி ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி 27 வருடங்கள் ஆகியிருந்தது.

- Advertisement -

மேலும் இந்த டெஸ்ட் தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னணி வீரர் ஜேசன் ஹோல்டர் மற்றும் கையில் மேயர்ஸ் ஆகியோர் விளையாட வரவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக்குகளில் விளையாட சென்று விட்டார்கள்.

இந்த நிலையில்தான் கரீபியன் டி20 லீக்கில் எதிர்பாராத விதமாக இந்திய அனலைசர் பிரசன்னா மூலமாக அமேசான் வாரியர்ஸ் அணிக்கு விளையாடும் வாய்ப்பைப் பெற்ற ஷாமர் ஜோசப் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸ் முக்கியமான 36 ரன்கள் எடுத்தார். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்தில் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தினார். மேலும் அதே இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்டில் தான் அவருடைய மேஜிக் வேகப்பந்து வீச்சு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்து அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. 200 பிளஸ் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியை தடுத்து நிறுத்தி ஏழு விக்கெட் கைப்பற்றி, 27 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்த ஷாமர் ஜோசப் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு இந்தியாவில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருக்கும் அட்கிஷ்டன் முதல் பாதி பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட முடியாது என்பதால் வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இன்னொரு இங்கிலாந்து வீரர் மூலமாக இவருக்கு ஐபிஎல் தொடர் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க : “29 பந்தில் சதம்.. என் இடத்தை நிரப்ப போவது இந்த பையன்தான்” – டேவிட் வார்னர் கணிப்பு

இதுகுறித்து ஐபிஎல் வெப்சைட்டில் வெளியான தகவலில் “டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2024 ஆம் ஆண்டில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக மார்க் வுட் இடத்தில் ஷாமர் ஜோசப் மூன்று கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காபா டெஸ்ட் போட்டியில் இந்த வேகப்பந்து வீச்சாளர் முன்னணியில் இருந்தார். இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்று வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்” என்று கூறப்பட்டிருக்கிறது.