வீடியோ.. எனக்காக எத்தனை முறை பண்ணியிருக்க.. இப்ப உனக்காக பண்றேன் – அஸ்வின் ரிஷப் பண்ட்க்காக செய்த விஷயம்

0
133
Ashwin

2022 ஆம் ஆண்டு இறுதியில் பெரிய சாலை விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பிய ரிஷப் பண்ட் மறுவாழ்வு காலத்தில் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து, நல்ல உடல் தகுதியை கடுமையாக உழைத்து சீக்கிரத்தில் பெற்று, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக திரும்பியதோடு, விக்கெட் கீப்பராகவும் திரும்பி எல்லோரையும் மகிழ்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறார்.

மேலும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுகின்ற அறிவிப்பு வந்த உடனே, அவர் சிறந்த முறையில் விளையாடி விக்கெட் கீப்பிங் செய்தால், டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அவருக்கான இடம் காத்திருக்கிறது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியது ரிஷப் பண்ட்டையும் ரசிகர்களையும் இன்னும் பெரிய உற்சாகத்திற்கு கொண்டு சென்றது.

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணி நடப்பு 17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக, பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு போட்டி அன்று திறக்கப்பட்ட முல்லன்பூர் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் பரிதாபமாக மீண்டும் தெரிந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது. இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த ரிஷப் பண்ட் 18 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கில் பழைய ரிஷப் பண்ட்டை பார்க்க முடியாவிட்டாலும், விக்கெட் கீப்பராக அவர் மிகச் சிறப்பாக தெரிந்தது நல்ல விஷயமாக அமைந்திருந்தது. ஏனென்றால் அது அவரது உடல் தகுதியை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியை வலிமையான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட் ஸ் அணியை அபாரமாக வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த போட்டிக்காக ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் டெல்லி அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி டி20 உலககோப்பை ஆடனுமா?.. இதுதான் என் வாழ்க்கையில் கேட்கிற குப்பையான விஷயம் – ஆரோன் பின்ச் கோபம்

நேற்று வலைப்பயிற்சியில் ரிஷப் பண்ட் ஈடுபட்டிருந்தபொழுது, அவருக்கு பின்னால் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை உற்சாகப்படுத்தினார். விக்கெட் கீப்பராக இருந்து ரிஷப் பண்ட் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நிறைய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தந்து கொண்டே இருப்பார். தற்பொழுது பெரிய விபத்தில் இருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருக்கும் ரிஷப் பண்ட்டுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் உற்சாகப்படுத்தி இருப்பது எல்லோரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.