கோலி டி20 உலககோப்பை ஆடனுமா?.. இதுதான் என் வாழ்க்கையில் கேட்கிற குப்பையான விஷயம் – ஆரோன் பின்ச் கோபம்

0
363
Virat

இந்தியாவில் மார்ச் 22ம் தேதி துவங்கிய 17ஆவது ஐபிஎல் சீசன் மே மாதம் 26ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக பல அணிகள் ஐபிஎல் தொடரை தங்களுடைய பயிற்சி முகாமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலை இந்திய சூழ்நிலைக்கு ஒத்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித் அகர்கர் தலைமையில் ஏற்கனவே டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி ஓரளவுக்குத் தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றும், அந்த அணியில் தேர்வாகி இருக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடினால் மட்டுமே வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய தேர்வுக்குழுவினர் விராட் கோலி டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவதை விரும்பவில்லை என்று ஒரு கருத்து சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு திடீரென பரவியது. இது குறித்து இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கருத்து சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றது. மேலும் இந்த விஷயத்தில் பிசிசிஐ மீது குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

இப்படியான சூழலில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது இரண்டாவது போட்டியில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி பேசும் பொழுது, உலகம் முழுவதும் கிரிக்கெட்டை கொண்டு செல்வதற்காக, விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே தன்னை இந்திய டி20 அணியில் வைத்திருக்கிறார்கள் என்று பரபரப்பான கருத்து ஒன்றை கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறும் பொழுது “ஒவ்வொரு முறை ஐசிசி தொடர் வரும்பொழுதும், மக்கள் விராட் கோலியை பற்றி மட்டுமே ஏன் பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. இந்திய அணியில் அவரது இடத்திற்கான அழுத்தம் அவருக்கு இருக்கிறதா? இதுதான் நான் என் வாழ்க்கையில் கேள்விப்பட்ட மிகப்பெரிய குப்பையான விஷயம். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் மிகச்சிறந்த வீரர்.

- Advertisement -

இதையும் படிங்க : ரஷித் கானின் முதல் பந்துக்கு என் பிளான் இதான்.. சிஎஸ்கேல இதைத்தான் கத்துக்குறேன் – சமீர் ரிஸ்வி பேட்டி

விராட் கோலி 140 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடட்டும். இன்னொரு வீரர் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட கூடியவராக கூட இருக்கட்டும். ஆனால் அவரை அணிக்கு தேர்வு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் பெரிய போட்டிகளில் ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைக்கிறார். இப்படி இருக்கும் பொழுது அவர் தேவையா தேவையில்லையா என்ற பேச்சுகள் எல்லாம் பெரிய நகைச்சுவையானது” என்று கூறியிருக்கிறார்.