“218-10.. அஸ்வின் பைய்யா நீங்க போங்க.. இல்ல நீதான் போகனும்”.. நெகிழ வைத்த குல்தீப் அஸ்வின்.. சுருண்ட இங்கிலாந்து

0
454
Ashwin

மார்ச்-7. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 100 ரன்னுக்கு 1 விக்கெட் என இருந்து 218 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது.

இந்த போட்டிக்கான முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி 79 ரன்கள் எடுத்து வழக்கம்போல் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 27 ரன்கள் எடுத்தார். இந்த துவக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஒல்லி போப் 11, ஜோ ரூட் 26, ஜானி பேர்ஸ்டோ 29, பென் ஸ்டோக்ஸ் 0, பென் போக்ஸ் 24, டாம் ஹார்ட்லி 6, மார்க் வுட் 0, ஜேம்ஸ் ஆண்டர்சன் 0, சோயப் பஷீர் 11 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் 218 ரன்களுக்கு இழந்தது.

இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 15 ஓவர்கள் பந்து வீசி 72 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின் 11.4 ஓவர்கள் பந்து வீசி 51 ரன்கள் விட்டு தந்து 4 விக்கெட் கைப்பற்றினார். இடையில் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார்.

இன்று ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அவர் பந்துவீச்சாளராக நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

எனவே இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனதும், இந்திய அணியை வழிநடத்தி பெவிலியன் அழைத்துச் செல்ல குல்தீப் யாதவ் பந்தை ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் கொடுத்தார். ஆனால் அதிக விக்கெட் கைப்பற்றி இருந்த குல்தீப் யாதவ்தான் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் குல்தீப் யாதவின் அன்பான மரியாதையை மறுத்து ‘நீதான் நிறைய விக்கெட் வீழ்த்தி இருக்கிறாய். எனவே நீயே முன்னாள் போ அதுதான் சரியானது’ என வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க : 100-1 to 194-8.. இங்கிலாந்து அணியை சரித்துவிட்ட குல்தீப் யாதவ்.. பரிதாபமான பாஸ்பால்

இதற்கு அடுத்து குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு முன்னே சென்று ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். இந்திய வீரர்களின் இந்த பெருந்தன்மையான செயல் களத்தில் நெகிழ்வாக அமைந்திருந்தது. இதற்கு அடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவங்கி விளையாடுகிறது