100-1 to 194-8.. இங்கிலாந்து அணியை சரித்துவிட்ட குல்தீப் யாதவ்.. பரிதாபமான பாஸ்பால்

0
354
Kuldeep

மார்ச்-7 தரம்சாலா மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனம் மீண்டும் வெளிப்பட்டு இருக்கிறது.

இன்று டாஸ் வென்று தைரியமாக பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அரைசதம் பார்ட்னர்ஷிப் அமைத்து வழக்கம் போல் நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

பென் டக்கெட் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 27 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. இதற்கு அடுத்து ஒல்லி போப் விளையாட வந்தார். இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது.

இதற்கு அடுத்து அங்கிருந்து இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் மொத்தமாக சரிந்து விழ ஆரம்பித்தது. குல்தீப் யாதவ் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி பென் டக்கெட் 27, ஒல்லி போப் 11, ஜாக் கிரவுலி 79, ஜானி பேர்ஸ்டோ 29, பென் ஸ்டோக்ஸ் 0 இன ஐந்து விக்கட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி இங்கிலாந்து அணியை சரித்தார்.

இதற்கு நடுவே ரவீந்திர ஜடேஜா ஜோ ரூட் விக்கெட்டை 26 ரன்னில் வீழ்த்தினார். இதற்கு அடுத்து வந்த டாம் ஹார்ட்லி 6, மார்க் வுட் 0 இருவர் விக்கெட்டையும் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார்.

- Advertisement -

தற்பொழுது இங்கிலாந்து அணி தேநீர் இடைவேளையின் போது 55 ஓவர்களில் எட்டு விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்திருக்கிறது. குல்தீப் யாதவ் 5, ரவீந்திர ஜடேஜா 1, ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : தோனி ஸ்டைல்.. குல்தீபுக்கு மாஸ் ஐடியா தந்த துருவ் ஜுரல்.. அடுத்த பந்து விக்கெட்.. சூடு பிடிக்கும் களம்

இங்கிலாந்து அணி 100 ரன்னில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, மேற்கொண்டு 94 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை பரிதாபமாக விட்டு, ஐந்தாவது டெஸ்டிலும் மோசமான நிலையில் தற்பொழுது இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக குல்தீப் யாதவ் பந்துவீச்சு அமைந்திருக்கிறது.