“ரஜத் பட்டிதார் சர்பராஸ் கான் யாருக்கு வாய்ப்பு?” – இந்தியா பேட்டிங் பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி

0
546
Sarfaraz

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல்.ராகுல் மூன்று வீரர்களும் இருக்க மாட்டார்கள்.

இதில் விராட் கோலி மூன்றாவது டெஸ்ட்டுக்கு திரும்ப, மற்ற இருவரும் மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு வருவார்களா? என்பது குறித்து இதுவரை தெளிவான அறிக்கைகள் ஏதும் வெளிவரவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் இந்த மூன்று பேரின் இடத்தை நிரப்பவும் ரஜத் பட்டிதார், சர்ப்ராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சவுரப் குமார் என நான்கு வீரர்களை இந்திய தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது.

தற்பொழுது கேஎல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு வீரர்களின் இடம் நிரப்பப்பட வேண்டும். ரவீந்திர ஜடேஜா இடத்தை குல்தீப் யாதவுக்கு தருவார்கள் என்று தெரிகிறது. கேஎல்.ராகுல் இடம் அணியில் முன்பே தேர்வான ரஜத் பட்டிதாருக்கு கிடைக்கும்.

இதில் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்குமா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானம் பெரிய அளவில் வேகப்பந்து வீட்டுக்கு ஒத்துழைக்காது என்பதால், பும்ராவை மட்டும் வைத்துக்கொண்டு, பேட்டிங் யூனிட்டை வலிமைப்படுத்த சர்ப்ராஸ்கானுக்கு இடம் தரலாம் என்கின்ற கருத்து இந்திய முன்னாள் வீரர்களால் வைக்கப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது “இருவரில் யாரைத் தேர்வு செய்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கும். நிச்சயமாக அவர்கள் சூப்பர் வீரர்கள். கடந்த சில வருடங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

எனவே இது போன்ற விக்கெட்டுகளில் அவர்கள் உண்மையில் அணிக்கு நிறைய நன்மையை கொண்டு வர முடியும் இன்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இதையும் படிங்க : 2வது டெஸ்ட் விசாகப்பட்டினம் பிட்ச் எப்படி இருக்கிறது?.. உண்மையை உடைத்த இங்கிலாந்து வீரர்

இருவரில் ஒருவர் என்கின்ற முடிவு மிகவும் கடினமானது. ஆனால் இந்த முடிவை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் ஒருநாளில் எடுத்தாகத்தான் வேண்டும். அவர்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.