2வது டெஸ்ட் விசாகப்பட்டினம் பிட்ச் எப்படி இருக்கிறது?.. உண்மையை உடைத்த இங்கிலாந்து வீரர்

0
219
Zak

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை மறுநாள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது.

முதல் போட்டி நடைபெற்ற ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானம் கொஞ்சம் மெதுவாகவும் அதே சமயத்தில் சுழல் பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகமாகவும் இருந்தது. ஆனால் இந்தியாவில் சமீப சில ஆண்டுகளாக உருவாக்கப்படும் சுழற் பந்துவீச்சுக்கு மிகச் சாதகமான ஆடுகளங்கள் போல அவை இல்லை.

- Advertisement -

மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானமும் இப்படியான மைதானமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய ஆதரவு இருக்காது அதனால் பும்ரா மட்டும் போதும் என இந்திய தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

பொதுவாக விசாகப்பட்டினம் மைதானத்தின் ஆடுகளம் செம்மண் ஆடுகளம் கிடையாது. கருப்பு மண் ஆடுகளம். இங்கு பந்து பெரிய அளவில் பவுன்ஸ் ஆகாது. அதே சமயத்தில் மிகவும் மெதுவாகவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி இரண்டாவது போட்டிக்கான விசாகப்பட்டினம் மைதானத்தின் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது குறித்தான முதல் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது “தற்பொழுது ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதாக எங்கள் வீரர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் ஆடுகளம் ஈரப்பதத்தோடு இருப்பதாகவும், புல்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அவர்களுடைய சொந்த நிலைமையில் அவர்கள் மிகவும் பலமானவர்கள். இன்னும் நான்கு ஆட்டங்கள் இருக்கின்றன. நாங்கள் சிறப்பாக செயல்படுவதில் உறுதியாக இருந்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

அபுதாபி பயிற்சி முகாமில் நாங்கள் நல்ல அளவில் பந்து திரும்பக் கூடிய விக்கட்டுகளை வாங்கி அதில் பயிற்சி செய்திருக்கிறோம். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் இரண்டுமே நல்ல ஷாட் செலக்சன்.

இதையும் படிங்க : “கிரிக்கெட்ல இந்த ஷாட்டுக்கு நான்தான் மாஸ்டர்.. எனக்கு நான்தான் கோச்” – பாபர் அசாம் பேச்சு

இப்படி விளையாடுவதின் மூலம் ஸ்பின்னை ஆட்டத்தில் இருந்து எடுத்து விடலாம். மேலும் இப்படி விளையாடுவதால் நான்கு பீல்டர்கள் வெளியில் இருப்பார்கள். மேலும் எங்களுக்கு ஸ்வீப் போலவே ரிவர்ஸ் ஸ்வீப்பும் இயல்பாகவே வரும்” என்று கூறியிருக்கிறார்.