அடுத்த விராட் கோலி இந்த பையன்தான்.. 2 பேர்கிட்டயும் ஒரு முக்கிய குவாலிட்டி இருக்கு – இர்பான் பதான் கருத்து

0
58
Irfan

நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கடுமையாக மோதிக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றன. இதன் காரணமாக போட்டிகளும் பரபரப்பு தன்மை நிறைந்ததாக மாறி இருக்கிறது. நேற்று இந்த வகையில் ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை ஹைதராபாத் வென்றது. இதில் மிகச் சிறப்பாக ராஜஸ்தான் அணிக்கு விளையாடிய ஜெய்ஷ்வால் மற்றும் ரியான் பராக் குறித்து இர்பான் பதான் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. அந்த அணியின் மிகப்பெரிய வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருமே ரன் ஏதும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ரன்னுக்கு இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இப்படியான நிலையில் ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவருமே அரை சதம் அடித்தார்கள்.

இந்த ஜோடி நேற்று 78 பந்துகளில் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதில் ஜெயஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இளம் வீரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால், மேற்கொண்டு வந்த வீரர்கள் கையில் இருந்த ஆட்டத்தை மோசமாக விளையாடி தோற்றார்கள்.

இதில் ஜெய்ஸ்வால் குறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும்பொழுது “நடப்பு ஐபிஎல் சீசனில் ஜெய்ஸ்வால் ஆரம்பத்தில் பந்தை மிக கடினமாக அடிக்க முயற்சி செய்தார். அதற்கு அவர் பெரிய விலை கொடுத்தார். இருந்தாலும் கூட சிலபல போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, அவர் உடனடியாக தன்னுடைய அணுகு முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார். அங்கிருந்து ராஜஸ்தான் அணிக்காக அவருடைய பேட்டில் இருந்து ரன் வர ஆரம்பித்தது.

- Advertisement -

இவரும் விராட் கோலி போல மூன்று வடிவ கிரிக்கெட்டில் சிறந்தவராக வருவார். விராட் கோலி தன்னுடைய அனுபவத்தை முழுமையாக பயன்படுத்தினார். அவர் குறைகளை சரி செய்வதிலிருந்து தப்பி ஓடவில்லை. அதேபோல் ஜெய்ஸ்வாலும் தன்னுடைய தவறுகளை சரி செய்து கொள்ள கூடிய வீரராக இருக்கிறார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது அறிமுகமாகவில்லை. ஆனால் கூடிய விரைவில் அவர் அதிலும் அறிமுகமாவார். விராட் கோலி போல மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடக் கூடியவராக இருப்பார்” எனக் கூறியிருக்கிறார்