சிஎஸ்கே கிடையாது.. 2024 ஐபிஎல் தொடரில் வீழ்த்த கடினமான அணி இதுதான் – ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு

0
448
Smjth

2024 ஐபிஎல் சீசனில் 10 அணிகளும் தங்கள் முதல் போட்டியை விளையாடி முடித்த பொழுது, சொந்த மைதானத்தில் விளையாடிய ஐந்து அணிகளும் வெற்றி பெற்றன. இதற்கு அடுத்து நடைபெற்றதுக்கும் மூன்று போட்டிகளிலும் பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் என சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்று இருக்கின்றன.

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதி வந்த பிறகு, ஏறக்குறைய எல்லா அணிகளும் மற்ற அணிகளுக்கு சமமான சவாலை கொடுக்க கூடிய இடத்திற்கு முன்னேறி இருக்கின்றன. எனவே ஐபிஎல் தொடர் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி தன்மை வாய்ந்ததாக மாறி இருக்கிறது. கடைசி ஓவர் வரை வெற்றியை தீர்மானிக்க முடியாத அளவுக்கு போட்டி செல்கிறது.

- Advertisement -

2024 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் செய்த நான்கு அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று நிறைய கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். இதில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் தோற்றுகிறது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் பலவீனமாக தெரியக்கூடிய அணியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மட்டுமே இருந்து வருகிறது.

இந்த போட்டி குறித்து கிரிக்கெட் வர்ணனையாளராக ஐபிஎல் தொடரில் மாறி உள்ள ஸ்மித் கூறும் பொழுது “தற்போது ஐபிஎல் தொடரில் நடைபெற்றுள்ள எல்லா போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடும் அணிகளை வெற்றி பெற்று இருக்கின்றன. டெல்லி ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியிலும் இதுவே தொடரலாம். ராஜஸ்தான் ராயல் அணி ஒரு முழுமையாக அணியாக தெரிகிறார்கள். அவர்களிடம் ஸ்பின்னர்கள் சாகல் மற்றும் அஸ்வின் இருப்பது பெரிய பலம். அவர்கள் இருவரும் பந்து வீசுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அவர்கள் ஐபிஎல் தொடரில் எதிரணிக்கு ஆபத்தான பந்துவீச்சாளர்கள். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்துவது கடினமாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : தம்பி தலை நிமிர்ந்து இரு.. மும்பை இளம் வீரருக்கு சிஎஸ்கே பிராவோ நெகிழ வைக்கும் மெசேஜ்

சஞ்சு சாம்சன் மிகவும் அழகாக விளையாடினார். அவர் மிகவும் நன்றாகவும் பேட்டிங்கில் வசதியாகவும் இருப்பது போல் தெரிகிறது. அவர் பந்தை நன்றாக அடிக்க செய்தார். அவரது கேப்டன்சியும் நன்றாக இருந்தது எனவே இவற்றை தொடர விரும்புவார். கடந்த கடந்த காலங்களில் ஐபிஎல் தொடரில் இரண்டாம் பகுதி கடினமாக இருந்து வந்தது. இது அவரது மனதில் இருக்கும் எனவே அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முயற்சி செய்வார்” என்று கூறியிருக்கிறார்.