தம்பி தலை நிமிர்ந்து இரு.. மும்பை இளம் வீரருக்கு சிஎஸ்கே பிராவோ நெகிழ வைக்கும் மெசேஜ்

0
508
Bravo

நேற்று ஐபிஎல் 17வது சீசனில் எட்டாவது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய போட்டியை அந்த அணியால் எப்பொழுது மறக்க முடியாத படி மாறியது.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த மிக அதிகபட்ச ரன்கள் என சாதனை படைத்தது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் ரொட்டேஷன் மிகவும் சாதாரணமாக இருந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் 10 ஓவர்களில் ஹைதராபாத் அணி 148 ரன்கள் குவித்து இருந்த பொழுதும், மும்பை இந்தியன்ஸ் ஆனியன் சிறந்த பந்துவீச்சாளரான பும்ரா ஒரு ஓவர் மட்டுமே வீசி இருந்தார். ஆரம்பத்திலேயே ரன் கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கு ஹர்திக் பாண்டியா எந்த பயிற்சியும் செய்யவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து பும்ரா வீசிய ஓவர்களை அடிக்க வேண்டிய அவசியம் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு உருவாகவில்லை. எனவே அவரை தடுத்து விளையாடி மற்ற பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி மாபெரும் ரன்னை குவித்து விட்டார்கள்.

மேலும் நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் 17 வயதான மபாகா எனும் இளம் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர் 66 ரன்கள் விட்டுத் தந்தார். ஐபிஎல் தொடரில் ஒரு அறிமுக பந்துவீச்சாளர் தந்த அதிகபட்ச ரன் என மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார். சிறுவனாக இருந்த போதிலும் இவர் குறித்து வெளியில் சில விமர்சனங்கள் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த இளம் வீரருக்கு செய்தி அனுப்பிய சிஎஸ்கே பவுலிங் கோச் பிராவோ “உங்கள் தலையை உயர்த்திக் கொள்ளுங்கள் வீரரே. நீங்கள் நிச்சயமாக இதிலிருந்து மீண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த ஒரு ஆட்டத்தை வைத்து உங்களை நீங்கள் சந்தேகிக்க வேண்டாம். நீங்கள்சிறப்பாக செயல்படுவீர்கள். இந்தத் தொடர் முடியும் பொழுது நீங்கள் நல்ல இடத்தில் இருப்பீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : அண்டர் 19 மேட்ச்க்கும் ஐபிஎல் மேட்ச்க்கும் வித்தியாசம் புரியுதா தம்பி? – 17 வயது மபாகா பற்றி ஸ்டெயின்

மேலும் இந்த இளம் வீரர் குறித்து கீரன் பொல்லார்ட் கூறும் பொழுது “இந்த இளைஞன் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். உங்கள் நண்பர்கள் உங்களைப் பற்றி நிச்சயம் பெருமைப்படுவார்கள் என்பதில்நான் உறுதியாக உள்ளேன். அலுவலகத்தில் முதல் நாள் வேலை கடினமாக இருந்தாலும் கூட, நீங்கள் தொடர்ந்து வருவதை நான் விரும்புகிறேன். எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. இந்த 17 வயது இளம் வீரருக்கு நாங்கள் ஒரு நல்ல அடித்தளத்தை வழங்குவோம்” என்று கூறியிருக்கிறார்.