60 பந்து அசத்தல்.. ஐபிஎல் வரலாற்றில் ஜெய்ஸ்வால் சாதனை சதம்.. மும்பையை வென்றது ராஜஸ்தான் அணி

0
608
Jaiswal

இன்று ஐபிஎல் தொடரில் ஜெய்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் அதிரடி சதத்துடன், ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தைரியமாக தேர்ந்தெடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 6(5), இஷான் கிஷான் 0(3), சூரியகுமார் யாதவ் 10(8) என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன் பங்களிப்பு எதுவும் இல்லாமல் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் நெகேல் வதேரா இருவரும் 52 பந்துகளில் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பை இந்தியன்ஸ் அணியை காப்பாற்றினார்கள். நெகேல் வதேரா 24 பந்தில் 3 பௌண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து திலக் வர்மா 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் எடுத்தார். மற்ற மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பான முறையில் விளையாடவில்லை.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் சந்தீப் சர்மா நான்கு ஓவர்களுக்கு 19 ரன்கள் மட்டுமே தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

பார்ம்க்கு வந்த ஜெய்ஸ்வால்

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளத்தை உருவாக்கினார்கள். சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் 25 பந்தில் ஆறு பவுண்டரிகள் உடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்த ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார். முதல் ஐபிஎல் சதமும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் 22 வயதில் இரண்டு சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : தோனி ஸ்பெஷலா ரெடி ஆகி இருக்காரு.. லக்னோ அணியை பழி வாங்க போறோமா? – சிஎஸ்கே மைக் ஹஸி பேட்டி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவில் 18.4 ஓவரில் இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. ஜெய்ஸ்வால் 104(60), சஞ்சு சாம்சன் 38(28) ரன்கள் எடுத்தார்கள்.இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் 65 பந்துக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று ஏறக்குறைய பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்து இருக்கிறது என்று கூறலாம்.