பட்லர் சதம் அடிச்சாருதான்.. ஆனா ஆட்டத்தை மாத்தினது இந்த இடத்துல இவருதான் – சஞ்சு சாம்சன் பேட்டி

0
475
Sanju

நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்து படைப்பதாக அமைந்திருந்தது. இந்த போட்டியில் 20 ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடிய ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார். இந்த வெற்றி குறித்து போட்டிக்கு பின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் 59 பந்துகளில் அதிரடியாக 109 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஹெட்மயர் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். முதல் ஆறு விக்கெட்டுகளும் சீக்கிரத்தில் விழுந்து விட, வெற்றியை நோக்கி முன்னேறிய போது கூடுதலாக இரண்டு விக்கெட் விழுந்து பெரிய அழுத்தமான நிலையில் ராஜஸ்தான் இருந்தது.

இந்த நிலையில் இருந்து தனி ஒரு வீரராக ஆட்டத்தை கையில் எடுத்து ஜோஸ் பட்லர் நேற்று சதம் அடித்ததோடு வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்தும் வைத்தார். 60 பந்துகள் களத்தில் நின்று 107 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் தொடரில் அவருக்கு இது ஏழாவது சதமாக பதிவானது. நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாகவும் இவரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி குறித்து பேசி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்பொழுது “வெற்றி பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் முதல் ஆறு விக்கெட்டுகளை வேகமாக இழந்து விட்டதாக பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் உள்ளே வந்த ரோமன் பவல் சுனில் நரைன் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அப்போதுதான் நாங்கள் ஆட்டத்தில் இருப்பதை உணர்ந்தோம். அது போட்டிக்குள் திரும்ப வர சிறப்பான வழி. அவர்களும்நல்ல முறையில் விளையாடினார்கள். அவர்களிடமிருந்த சுழற் பந்துவீச்சாளர்களுக்கு இது நல்ல மைதானமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : நினைச்சே பார்க்கல.. 20வது ஓவரை வருணுக்கு கொடுத்த காரணம் இதுதான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

நாங்கள் எங்கிருந்து இரண்டு சிக்ஸர்களை எடுப்பது என்று தான் கவலைப்பட்டோம். அந்த இடத்தில்தான் ரோமன் பவல் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். ஜோஸ் பட்லர் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இதைத்தான் எங்களுக்கு செய்து வருகிறார். அவர் துவக்க ஆட்டக்காரராக வந்தால் 20 ஓவர் வரை களத்தில் நிற்க முடியும் என்று எங்களுக்கு தெரியும். அப்படி அவர் 20 ஓவர் நின்று விட்டால், அடிக்க முடியாத ரன் எட்ட முடியாத இலக்கு என்று எதுவும் கிடையாது” எனக் கூறியிருக்கிறார்.