இம்பேக்ட் பிளேயர் விதியைப் பார்த்து அழுவாதீங்க.. நடிகர் ஷாருக்கான் நல்ல அறிவுரை சொன்னார் – வருண் சக்கரவர்த்தி பேட்டி

0
103
Varun

சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா அணிக்கு எதிராக பஞ்சாப் அணி அதிகபட்ச ரன் துரத்தலை செய்து சாதனை படைத்தது. இதற்குப் பிறகு மீண்டு வந்து நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணி டெல்லி அணியை வென்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற வருண் சக்கரவர்த்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடி, வீரர் ஸ்டப்ஸ் மற்றும் இளம் வீரர் குமார் குஷ்கரா ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வருண் சக்கரவர்த்தி கைப்பற்றினார். இதன் காரணமாக டெல்லி அணியின் மிடில் ஆர்டர் முடிந்தது. இதுவே அவர்களின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்களுக்கு அவர் 16 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்திருந்தார். ஆனால் கடந்த சில போட்டிகளாக அவருடைய பந்துவீச்சு சிறப்பாக இல்லை. இந்த நிலையில் சொந்த மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக நல்ல முறையில் திரும்பி வந்து ஆட்டத்தை வென்று, ஆட்டநாயகன் விருதையும் ஜெயித்திருக்கிறார்.

போட்டிக்கு பின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வருண் சக்கரவர்த்தி பேசும்பொழுது “இந்த ஐபிஎல் வித்தியாசமானது என்பதை ஏற்றுக் கொண்டு நாம் முன்னேற வேண்டும். கடந்த சீசனிலும் இம்பேக்ட் பிளேயர் விதி இருந்தது. ஆனால் இந்த முறை இந்த விதியை எல்லா அணிகளும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. கூடுதல் பேட்ஸ்மேனை வைத்து எடுத்ததும் அதிரடியாக ரன் சேர்க்கிறார்கள். எனவே பவுலர்கள் இந்த விதியை பார்த்து அழுவதை விட்டுவிட்டு, நீங்கள் சவாலை ஏற்க வேண்டும்.

நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது விக்கெட் கொஞ்சம் நிதானம் ஆகிவிட்டது. முதலில் பந்து வீசும் பொழுது விக்கெட் நன்றாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் திரும்பவும் செய்தது. இதற்கு முன்பான போட்டிகளில் இப்படியான ஆடுகளம் கொல்கத்தாவில் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : நரைன் டீம் மீட்டிங்ல கலந்துக்க மாட்டாரு.. எனக்கு ஐடியாவும் தர மாட்டாரு.. எல்லாம் சால்ட்தான்.. ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

மேலும் பஞ்சாபுக்கு எதிரான போட்டி மிகவும் கடினமான ஒன்றாக அமைந்தது. நாங்கள் அணி நிர்வாகத்துடனும் பந்து வீச்சு பயிற்சியாளர் உடனும் பேசினோம். ஷாருக்கான் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசினார். ஐபிஎல் தொடரில் என்ன நடந்தாலும் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், அதை வைத்து உங்களை நீங்களே சந்தேகப்பட வேண்டாம் எனவும் கூறினார். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.