நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில், ஜாஸ் பட்லரின் மிக அபாரமான சதத்தினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் திரில்லர் வெற்றியை பெற்றது. கொல்கத்தா அணியின் தோல்விக்கான காரணம் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கி இருக்கிறார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுனில் நரைன் தொடக்கம் முதலே அதிரடியாக அடித்து ஆடினார்.
இவருக்கு மற்ற வீரர்கள் சிறிது நேரம் கம்பெனி கொடுக்க, சிறப்பாக விளையாடிய சுனில் நரேன் 56 பந்துகளில் 13 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 109 ரண்களை விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கு சற்று கடினமானது போல் தோன்றியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால் 19 ரன்களிலும் சஞ்சு சாம்சன் 12 ரன்களிலும் எதிர்பாராத விதமாக வெளியேறினர். ஜோஸ்பட்லர் ஒருபுறம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் ரியான் பராக் மட்டுமே 34 ரன்கள் குவித்தார். பின்னர் இறுதிக்கட்டத்தில் ரோமன் போவல் 13 பந்துகளில் ஒரு பவுண்டரி, மூன்று சிக்ஸ்கள் என 26 ரன்கள் குவிக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பட்லர் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள், ஆறு சிக்ஸர்கள் என 107 ரன்கள் குறித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
எனவே இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது
“கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. பட்லர் இந்த போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைவோம் என்று நினைக்கவே இல்லை. பட்லர் ஒரு முனையில் ரன்கள் குவித்ததோடு தனது விக்கெட்டும் விழாமல் பார்த்துக் கொண்டார். எங்கள் பந்துவீச்சாளர்களால் முடிந்த வரை முயற்சி செய்தும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
நல்ல வேலையாக இந்த தோல்வி எங்களுக்கு இப்போதே கிடைத்து விட்டது. முக்கியமான நேரத்தில் தோல்வி அடைந்திருந்தால் அது கடினமாக இருக்கும். சுனில் நரேன் கொல்கத்தா அணியின் விலை மதிக்க முடியாத சொத்து. அவரால் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். பந்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவே கடைசி ஓவரை வருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்தேன்.
இதையும் படிங்க:தோனி விராட் கோலி போட்டு கொடுத்த அந்த ரூட்லதான் விளையாடினேன்.. சங்கக்கராவும் அதையே சொன்னார் – ஜோஸ் பட்லர் பேட்டி
பட்லர் போன்ற ஒருவர் களத்தில் இருக்கும்போது அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம். எனவே இந்த தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் நிச்சயம் மீண்டு வருவோம். தோல்வியடைந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் குறித்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.