ஜெய்ஸ்வாலுக்கு யாரோட அட்வைசும் தேவையில்ல.. மேட்ச்ல டர்னிங் பாய்ன்ட் இந்த இடம்தான் – சஞ்சு சாம்சன் பேட்டி

0
337
Sanju

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எட்டாவது போட்டியில் விளையாடிய அந்த அணிக்கு இது ஏழாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பின் கேப்டன் சஞ்சு சாம்சன் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆச்சரியம் அளிக்கும் விதமாக டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் பொதுவாக இரண்டாவது பேட்டிங் செய்வது தான் சாதகமான விஷயமாக இருந்து வந்திருக்கிறது. டாஸ் போடுவது குறித்து சஞ்சு சாம்சன் ஆரம்பத்திலேயே மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா, இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் என மூன்று முக்கிய நட்சத்திர பேட்ஸ்மேன்களை பவர் பிளேவிலேயே இழந்துவிட்டது. ஆனாலும் திலக் வர்மா 65 ரன், நெகேல் வதேரா 49ரன் எடுக்க, மும்பை இந்தியன் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது.

ஆனால் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெகு எளிதாக மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி விட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 60 பந்தில் 104 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றிகரமாக இருந்து ஐபிஎல் திரும்பிய அவர் தடுமாறி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருக்கு இது முக்கியமான இன்னிங்சாக அமைந்தது.

வெற்றிக்குப் பின் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்பொழுது “எங்கள் அணியின் அனைத்து வீரர்களுக்கும் கிரெடிட் கொடுக்க வேண்டும். நாங்கள் பவர் பிளேவில் மிகச் சிறப்பாக ஆரம்பித்தோம். அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இடதுகை வீரர்களான திலக் மற்றும் வதேரா இருவரும் அற்புதமாக விளையாடினார்கள்.ஆனால் நாங்கள் போட்டியில் திரும்பி வந்த விதம்தான் ஆட்டத்தை வெல்ல உதவியது. சந்தீப் மற்றும் ஆவேஷ் இருவரும் கடைசியில் செயல்பட்ட விதம்தான் திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : எல்லாருக்குமே எல்லாம் தெரியும்.. அவங்கவங்களே குறைய ஏத்துக்கனும்.. தோத்தது இதனாலதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

இங்கு விக்கெட் ஆரம்பத்தில் எப்பொழுதும் வறண்டு காணப்படும். இரவில் குளிர் அதிகமாகி இரண்டாவது பேட்டிங் செய்ய நன்றாக மாறிவிடும். போட்டிக்கு நடுவே ஓய்வு கிடைக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதில் வீரர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு எந்த அறிவுரையும் சொல்லத் தேவையில்லை. அவர் எப்பொழுதும் நம்பிக்கையானவர். மேலும் நாங்கள் ஒரு போட்டி குறித்து மட்டும்தான் யோசிக்கிறோம். அடுத்து லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு ஆடுகளம் எப்படி இருக்கிறது? என்று பார்ப்போம்” என்று கூறி இருக்கிறார்.