எல்லாருக்குமே எல்லாம் தெரியும்.. அவங்கவங்களே குறைய ஏத்துக்கனும்.. தோத்தது இதனாலதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
1257
Hardik

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அவர்களது மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 179 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் 60 பந்தில் 14 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக பேட்டிங்கில் இருந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா “நாங்கள் ஆரம்பத்திலேயே சிக்கலில் மாட்டிக் கொண்டோம். பிறகு திலக் மற்றும் வதேரா இருவரும் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. நாங்கள் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பொழுது, 180 ரன்களை நோக்கி செல்வோம் என்று நினைக்கவில்லை. மேலும் கடைசியில் நாங்கள் சரியாக மதிக்காத காரணத்தினால் தான் 10 – 15 ரன்கள் குறைவாக இருந்தோம்.

நாங்கள் பந்து வீசும் போது பந்தை ஸ்டெம்புக்குள் வைத்திருக்க வேண்டும். நாங்கள் பவர் ப்ளேவில் பந்தை அகலமாக வெளியில் வைத்து விட்டோம். மேலும் களத்தில் எங்களுக்கு இது சிறந்த நாள் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக நாங்கள் இன்று மைதானத்தில் சரியாக கால் வைக்கவில்லை. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் எங்களை விட விஞ்சி சிறப்பாக செயல்பட்டார்கள்.

இந்த போட்டிக்குப் பிறகு வீரர்களிடம் குறைகள் குறித்து செல்வது சரியானது கிடையாது. எல்லோருமே தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள். எல்லோருக்குமே அவர்களுடைய ரோல் என்னவென்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியும். மேலும் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று, அதை மீண்டும் செய்யாமல் இருப்பதுதான் முன்னேறி செல்வதற்கான வழி. எங்களுடைய அணிக்குள் நாங்கள் தனிப்பட்ட வீரர்களின் குறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் நாங்கள் வேலை செய்து சரி செய்ய வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : என் மனசுல எதுவுமே இல்ல.. இந்த ரெண்டு பேருக்கு மட்டும் நான் ரொம்ப நன்றி சொல்ல விரும்பறேன் – ஜெய்ஸ்வால் பேட்டி

நான் எப்பொழுதும் வீரர்களை ஆதரிக்கவே விரும்புகிறேன். மேலும் எப்பொழுதும் நல்ல கிரிக்கெட்டை விளையாட கவனம் செலுத்த வேண்டும். எங்களது திட்டங்களில் ஒட்டிக்கொண்டு தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் எளிமையானது, அதை எளிமையாக வைத்திருக்கும் வரையில், அது நன்றாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.