சும்மா விமர்சிக்காதிங்க.. ரஞ்சி டெஸ்ட் பவுலரை ஓபனிங் பேட்டிங் அனுப்பியது இதுக்குதான் – சஞ்சு சாம்சன் விளக்கம்

0
281
Sanju

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டியில், ஒரு பந்துகள் மீதம் இருந்த நிலையில், சிம்ரன் ஹெட்மையர் அதிரடி பேட்டிங் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரஞ்சியில் அதிக விக்கெட் கைப்பற்றிய சுழல் பந்துவீச்சாளர் தனுஷ் கோட்டியனை பேட்டியில் ஓபனிங் அனுப்பியது ஏன் என சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்து இருக்கிறார்.

நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 147 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஜிதேஷ் சர்மா 24 பந்தில் 29 ரன்கள், கடைசி கட்டத்தில் அசுடோஸ் சர்மா 16 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். மொத்தமாக அந்த அணி 147 ரன்கள் சேர்த்தது. நேற்றைய ஆடுகளம் பேட்டிங் செய்ய கொஞ்சம் மெதுவாக கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு நடந்து முடிந்த ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய தனுஷ் கோட்டியனை துவக்க வீரராக அனுப்பி ஆச்சரியப்படுத்தியது. அவர் நடந்து முடிந்த ரஞ்சி டெஸ்ட் தொடரில் அரை இறுதியில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாவது மற்றும் பதினொன்றாவது விக்கெட்டுக்கு இவரும் துஷார் தேஷ்பாண்டேவும் சேர்ந்து சதம் அடித்து பார்ட்னர்ஷிப்பில் உலக சாதனை படைத்திருந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டி20 கிரிக்கெட்டில் துவக்க வீரராக வந்த தனுஷ் கோட்டியன் 31 பந்துகளை சந்தித்து 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 77.42 மட்டும்தான் இருந்தது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேனாக 30 பந்துகளை சந்தித்து மாறி இருக்கிறார். இவரை துவக்க வீரராக அனுப்பியது குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விரிவாகவே விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது “தனுஷ் கோட்டியன் எங்களுக்கு ஒரு ஆல்ரவுண்டராக வந்தார் என்பது முக்கியம். அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங்கில் எங்கள் எல்லோரையும் கவரும் அளவுக்கு விளையாடினார்.

- Advertisement -

இதையும் படிங்க : சிவம் துபே 2024 டி20 உலககோப்பை இந்திய அணியில் செலக்ட் ஆகலைனா.. சிஎஸ்கேதான் காரணம் – மனோஜ் திவாரி பேச்சு

அதே சமயத்தில் எங்களிடம் ஒரு நல்ல பேட்டிங் வரிசை இருந்தது. அந்த பேட்டிங் வரிசையை மாற்றி நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனவே பட்லர் இல்லாத காரணத்தினால் அவருடைய இடத்திற்கு இவரை நேராக அனுப்பி விட்டோம். ஏறக்குறைய அடுத்த ஆட்டத்திற்கு பட்லர் தயாராகிவிட்டார். ஒரு போட்டிக்காக பேட்டிங் ஆர்டரை நிறைய பேருக்கு மாற்ற வேண்டியது இருந்ததால் அதைச் செய்யவில்லை” என்று கூறி இருக்கிறார்.