சிவம் துபே 2024 டி20 உலககோப்பை இந்திய அணியில் செலக்ட் ஆகலைனா.. சிஎஸ்கேதான் காரணம் – மனோஜ் திவாரி பேச்சு

0
388
Shivam

தற்பொழுது இந்தியாவின் நடைபெற்று வரும் 17ஆவது ஐபிஎல் சீசன் மே மாதம் 26 ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களில் இந்திய அணியில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து மனோஜ் திவாரி பேசியிருக்கிறார்.

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கான இடத்திற்கு முதல் வீரராக ஹர்திக் பாண்டியா, இவருக்கு அடுத்து மிதவேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபே ஆகியோர் முக்கிய வீரர்களாக இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி வெங்கடேஷ் ஐயர் இருக்கிறார் ஆனால் அவரை தேர்வு செய்வது கடினம்.

- Advertisement -

இதற்கு அடுத்து வேகப்பந்துவீச்சாளர்களில் பேட்டிங் செய்யக்கூடிய அளவில் தீபக் சஹர் மற்றும் சர்துல் தாக்கூர் இருவர் இருக்கிறார்கள். இவர்கள் நேரடியாக வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் வருகின்ற காரணத்தினால், இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் இடத்தில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமான ஒன்று.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி “ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பை அணியில் விளையாட விரும்பினால் அவர் பந்து வீச வேண்டும். தற்போது அவருடைய எக்கானமியை பாருங்கள். அவர் ஓவருக்கு 11 ரன்கள் கொடுத்து வருகிறார். இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் செயல்படவே இல்லை

- Advertisement -

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இந்த பார்மில் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இருக்க மாட்டார். ஏனென்றால் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் வலிமையான மனநிலை கொண்டவர். அவர் தைரியமான முடிவுகளை எடுப்பார். தற்பொழுது ஹர்திக் பந்து வீசாத காரணத்தினால், நீங்கள் சிவம் துபேவை அந்த இடத்துக்கு தயார் செய்யுங்கள்.

இதையும் படிங்க : கவாஸ்கர் சச்சினுக்கு செஞ்சத.. ஜெய்ஸ்வாலுக்கும் செய்யுங்க.. அந்த பையன் பாவம் – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

ஒரு சமயம் நமக்கு வெங்கடேஷ் ஐயர் கூட இருந்தார். தற்பொழுது சிவம் துபே வெங்கடேஷ் ஐயர் என எல்லோரும் பந்து வீசுவதை நிறுத்தி விட்டார்கள். நாம் எப்பொழுதும் உலகக் கோப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதை வென்று பல நாட்கள் ஆகிவிட்டது. ஒருவேளை சிவம் துபே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்படாவிட்டால் அதற்கு சிஎஸ்கேதான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் அந்த அணி பந்து வீச அனுமதிக்கவில்லை. இங்கு ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு மாற்று தேவை என்றால் சிவம் துபேவை தயார் செய்யுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -