6 பந்து 10 ரன்.. பயம் காட்டிய பஞ்சாப்.. சிறப்பாக முடித்த சிம்ரன் ஹெட்மயர்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

0
93
Ipl2024

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட பஞ்சாப் மாநிலம் முல்லன்பூர் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. கடைசி ஓவர் வரை சென்ற பரபரப்பான இந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் சிம்ரன் ஹெட்மயர் சிறப்பான முறையில் விளையாடி அந்த அணியை வெல்ல வைத்தார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டிக்கான ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக காணப்பட்டது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ரன்கள் எடுக்க பெரிதும் சிரமப்பட்டார்கள். பவர் பிளேவில் அந்த அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 38 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதர்வா டைடே 15(12), ஜானி பேர்ஸ்டோ 15(19), பிரப்சிம்ரன் சிங் 10(14), சாம் கரன் 6(10), ஜிதேஷ் சர்மா 29(24), ஷஷான்க் சிங் 9(9), லிவிங்ஸ்டன் 21(14), ஹர்பரித் பிரார் 3*(3) ரன்கள் எடுத்தார்கள். கடைசிக் கட்டத்தில் இம்பேக்ட் பிளேயர் ஆக வந்த அசுடோஸ் சர்மா பதினாறு பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 31 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் கேசவ் மகாராஜ் நான்கு ஓவர்களுக்கு 23 ரன்கள் இரண்டு விக்கெட், ஆவேஷ் கான் நான்கு ஓவர்களுக்கு 34 ரன்கள் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தனுஷ் கோட்டியன் 24(31), ஜெய்ஸ்வால் 39(28), சஞ்சு சாம்சன் 18(14), ரியான் பராக் 23(18) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டது. துருவ் ஜுரல் மற்றும் ஹெட்மயர் இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ருதுராஜ் அப்படியே தோனி மாதிரி.. அவர் மேல வைக்கிற இந்த விமர்சனம் அர்த்தமே இல்லாதது – சிஎஸ்கே கோச் ஸ்டீபன் பிளமிங் பேட்டி

இந்த நிலையில் ஆட்டத்தின் 18 வது ஓவரை வீசிய ஹர்சல் படேல் 14 ரன்கள் தந்து துருவ் ஜுரல் 6(11) விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து 19ஆவது ஓவரை வீசிய சாம் கரன் ஏழு ரன்கள் தந்து ரோமன் பவல் 11(5), கேசவ் மகாராஜ் 1(2) விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் கடைசி ஓவருக்கு பத்து ரன்கள் தேவைப்பட்டது. அர்ஸ்தீப் சிங் வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட ஹெட்மயர் 2 சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் ஆட்டம் இழக்காமல் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல் அணி ஆறாவது போட்டியில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.