ருதுராஜ் அப்படியே தோனி மாதிரி.. அவர் மேல வைக்கிற இந்த விமர்சனம் அர்த்தமே இல்லாதது – சிஎஸ்கே கோச் ஸ்டீபன் பிளமிங் பேட்டி

0
81
Dhoni

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது ஆறாவது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடியிருக்கும் சிஎஸ்கே கேப்டன் மற்றும் அந்த அணியின் துவக்க பேட்ஸ்மேன் ருதுராஜ் 155 ரன்களை 117.42 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இவரது மெதுவான பேட்டிங் குறித்து வெளியில் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. கேப்டன் பொறுப்பு இவரது பேட்டிங்கை பாதித்திருப்பதாக கூறுகிறார்கள்.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய மூன்று போட்டிகளில் மட்டுமே ருதுராஜ் தலைமையில் வெற்றி பெற்று இருக்கிறது. வெளியில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே அவரது கேப்டன்சி குறித்தும் சில விமர்சனங்கள் செல்கிறது.

ருதுராஜூம் தோனியும் ஒன்று

தற்பொழுது இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறும் பொழுது “இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இதற்கு முன்னாள் கேப்டன் எப்படி கூலாக இருந்தாரோ, அவரைப் போலவேதான் இவரும் கூலாக இருக்கிறார். இவர் தோனியின் அதே வடிவத்தில் செயல்முறையில் அப்படியே தான் இருக்கிறார். கேப்டன் மாற்றம் மிகவும் சுமுகமாக நடைபெற்றது.

இந்த மாற்றம் நன்றாக வேலை செய்திருக்கிறது. பொதுவாக கேப்டனை வெற்றியை வைத்து தீர்மானிக்கிறார்கள். ஆனால் நாங்கள் வித்தியாசமாக மதிப்பிடுகிறோம். அணியைச் சுற்றி அவரதுதலைமை உயர்தரமானது. மேலும் அவர் சிஎஸ்கே அணிக்கு பல ஆண்டுகளாக கேப்டனாக இருப்பார் என்று நம்புகிறேன்.

- Advertisement -

ருதுராஜ் தன்னுடைய விளையாட்டில் ஈர்க்கக்கூடிய ஒரு இளைஞன். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். நியாயமற்ற முறையில் சில புள்ளி விபரங்களால் அவர் விமர்சிக்கப்படுகிறார். அவர் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி சரியாக விளையாடுகிறார். கொல்கத்தாவுக்கு எதிரான அவரது ஆட்டம் ஒரு கேப்டன் எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு உதாரணம். ருதுராஜ் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.

இதையும் படிங்க : தோனியையும் மிஞ்சி.. சஞ்சு சாம்சன் செய்த மாஸ் ரன் அவுட்.. நம்பவே முடியாமல் சென்ற லிவிங்ஸ்டன்

நாங்கள் விளையாடும் எல்லா மைதானங்களிலும் மஞ்சள் மிக அதிகமாக இருக்கும். இது முழுக்க முழுக்க தோனிக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் அன்பு. அதில் நாங்களும் பயனடைந்து கொள்கிறோம். மக்கள் அவருக்கு கொடுக்கும் பெரிய ஆதரவை நாங்கள் மிகப்பெரிய மரியாதையாகத்தான் பார்க்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.