கண்டிப்பா அவுட்.. இல்லனா தினேஷ் கார்த்திக் அப்படி பண்ணிருக்க மாட்டாரு – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

0
507

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. பெங்களூர் அணி ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணி வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு கொடுக்கப்பட்ட நாட் அவுட் சர்ச்சையாகி வரும் நிலையில், அது குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.

- Advertisement -

குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பணியின் தாக்கம் இரண்டாவது பாதியில் அதிகமாக இருக்கும் என்பதால் ராஜஸ்தான் அணி இந்த முடிவை எடுத்தது. இதன்படி பெங்களூர் இன்னிங்ஸ் விராட் கோலி மற்றும் பாப் டு பிளஸ்சிஸ் தொடங்கி வைக்க, நான்கு ஓவர்களில் 37 ரன்கள் குவித்த நிலையில் பெங்களூர் அணி தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

டு பிளஸ்சிஸ் 17 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து விராட் கோலி 33 ரன்களில் ஆட்டம் இழந்தார். ராஜஸ்தான் அணி தொடர் தோல்விகளின் மூலம் தனது தவறை திருத்திக் கொண்டு இந்த போட்டிக்குள் நுழைந்திருப்பது தெளிவாக தெரிந்தது. அதன் பிறகு கிரீன் மற்றும் பட்டிதார் கூட்டணியில் 41 ரன்கள் குவிக்க, கிரீன் மற்றும் மேக்ஸ்வெல்லை ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற்றினார்.

இவர்களுக்குப் பிறகு லோம்ரோர் மட்டும் 17 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பதினைந்தாவது ஓவரின் முதல் பந்தை ஆவேஷ் கான் வீச அதனை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் எல் பி டபிள்யு முறையில் ஆட்டம் இழந்தார். இதனை எதிர்த்து நடுவரிடம் தினேஷ் கார்த்திக் அப்பீல் செய்ய, டிவியில் பார்த்த போது பந்திருக்கும் பேட்டுக்கும் இடைவெளி இருந்தபோதிலும் ஸ்னிக்கோ மீட்டர் என்று அழைக்கப்படும் ஒலி அளவிடும் கருவியில் சத்தம் கேட்டது.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

இதனால் பந்து முதலில் பேட்டில் பட்டதாக நினைத்து தினேஷ் கார்த்திக்கிற்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது. பந்துதான் பேட்டில் படவில்லையே பிறகு ஏன் நாட் அவுட் கொடுக்கப்பட்டது என்ற விமர்சனம் எழுந்த நிலையில் அதற்கு விளக்கம் அளித்த சுனில் கவாஸ்கர் “பேட் ஆனது முதலில் பேடுகளை தாக்கியதால்தான் ஸ்னிக்கோ மீட்டரில் இருந்து சத்தம் இருந்தது. பந்து பேட்டை தாக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கிற்கு பந்து பேட்டின் எட்ஜில் பட்டதாக தெரிந்திருந்தால் நேரடியாக ரிவ்யூவருக்கு சென்றிருப்பார். நான் ஸ்டிரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனிடம் கலந்து ஆலோசித்து விட்டு ரிவ்யூவிற்கு சென்றிருக்க மாட்டீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: 9 போட்டி 52 ரன்.. பெரிய பெரிய மேட்ச்சில் மேக்ஸ்வெல் பண்ணத ஏத்துக்கவே முடியாது – கெவின் பீட்டர்சன் விமர்சனம்

இருப்பினும் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் 13 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். இதனால் இந்த விஷயம் பெரிதாக சர்ச்சையை கிளப்பவில்லை. பெங்களூர் அணி நிர்ணயித்த 173 ரன்கள் இடத்தை ராஜஸ்தான் அணி தற்போது துரத்தி வருகிறது.