சிஎஸ்கேல இந்த 4 பேர்கிட்ட எப்பவும் பேசலாம்.. இதுதான் எனக்கு உதவியா இருக்கு – ரச்சின் ரவீந்தரா பேட்டி

0
218
Rachin

17 ஆவது ஐபிஎல் சீசன் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே சர்வதேச போட்டியில் காயம் அடைந்தார். இதன் காரணமாக அப்போதிருந்து எட்டு வாரங்கள் ஐபிஎல் தொடருக்கு கிடைக்க மாட்டார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கான்வே உடன் நியூசிலாந்து வேலைக்கு விளையாடும் இடது கை துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தராவையும் 1.80 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியிருந்தது. எனவே கான்வே இடம் இயல்பாக ரச்சின் ரவீந்தராவுக்கு ஒதுக்கப்பட்டது. கிடைத்த இரண்டு வாய்ப்பில் 237 ஸ்ட்ரைக் ரேட், 41 ரன் ஆவரேஜ் என கலக்கலாக பேட்டிங் செய்து எல்லோரது கவனத்தையும் அவர் திருப்பி இருக்கிறார்.

- Advertisement -

அடுத்து கான்வே அணிக்குள் வந்தால் ரச்சின் ரவீந்தராவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, சிஎஸ்கே அணிகின்ற ரசிகர்களோ அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மெகா ஏலத்திற்கு ரச்சின் ரவீந்தராவை சிஎஸ்கே அணி தக்க வைக்க வேண்டும் என்கின்ற அளவுக்கு சென்று விட்டார்கள். அந்த அளவிற்கு தனது அதிரடி பேட்டிங் மூலம் கவர்ந்திருக்கிறார்.

சிஎஸ்கே அணி குறித்து தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கும் சச்சின் ரவீந்தரா ” நான் என்னுடைய டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் ஓபனராக வந்ததில்லை. ஆறு அல்லது ஏழாவது இடத்தில்தான் அதிகம் பேட்டிங் செய்திருக்கிறேன். தற்பொழுது எனக்கு கிடைத்திருப்பது ஒரு புதிய ரோல். ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் விளையாட்டை விளையாடுவதின் மூலம் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். சிஎஸ்கே அணியில் நீங்கள் சென்று உங்கள் விளையாட்டை விளையாடுவதற்கான சுதந்திரம் இருக்கிறது. ஒருவேளை இதுதான் ரோல் தெளிவை கொடுக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் பேட்டிங் மட்டுமில்லாமல் எப்பொழுதும் பந்து வீச தயாராகவே இருக்கிறேன். உங்கள் அணியில் உள்ள முதல் மூன்று பேட்ஸ்மேன்களில் ஒருவர் பந்து வீச முடிந்தால் அது அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் தொடர்ந்து ஆல் ரவுண்டராகவே இருக்க விரும்புகிறேன். நான் வலையில் எப்பொழுதும் பந்து வீசி போட்டிக்கு தயாராக இருக்க முயற்சி செய்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனிகிட்ட சச்சினுக்கும் நடந்துச்சு.. ஏன் அசிங்கமா நடந்துகிட்டு நடிக்கிறிங்க – அஸ்வின் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு

நிச்சயமாக சிஎஸ்கே ஒரு குடும்பம் போன்றது. வீரர்கள் சௌரியமாக இருப்பது மற்றும் அவர்களுடைய ரோல் என்னவென்று தெளிவாக இருப்பது, அணிக்குள் இருக்கும் மிகவும் நிதானமான சூழல் இதெல்லாம் சேர்ந்து அப்படி ஆக்குகிறது. மேலும் நீங்கள் பிளம்மிங், தோனி, ருதுராஜ், ஹசி இவர்களோடு எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம். இதனால் அணிக்குள் சூழ்நிலை மிகவும் கூலாக இருக்கிறது. இது நான் நானாக இருந்து என்னை வெளிப்படுத்தி விளையாடுவதற்கு உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.