டி20 உலக கோப்பை பக்கத்துல இருக்கு.. ஹர்திக் பாண்டியா இந்த விஷயத்தை மாத்திக்கிட்டே ஆகனும் – ஷேன் வாட்சன் பேச்சு

0
42
Watson

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக மோத இருக்கிறது. அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது. தற்போது ஹர்திக் பாண்டியா குறித்து ஷேன் வாட்சன் முக்கிய விஷயம் ஒன்றைப் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டுமே சீரற்ற தன்மையில் இருந்தது. அவர் ஏதாவது ஒரு துறையில் சிறப்பாக செயல்பட்டு இருந்தால் கூட முடிவுகளில் வேறுவிதமான மாற்றங்கள் கிடைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் அவர் கடந்த ஆண்டுகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பந்துவீச்சில் தன்னை உயர்த்திக் கொண்டு முன்னே வந்தது போல, பேட்டிங்கிலும் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தில் வந்து விளையாடி அணியைக் காப்பாற்றி இருக்கிறார். கடந்த முறைகளில் அவரிடமிருந்து பொறுப்பான பேட்டிங் வெளிப்பட்டு இருக்கிறது. டி20 உலகக்கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா ஃபார்ம் கவலை தருகிறது.

இதுகுறித்து பேசி உள்ள ஷேன் வாட்சன் கூறும் பொழுது “மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுவதற்கு நிறைய இருக்கிறது. இந்த சீசனில் அவர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் யூனிட்டில் பெற்றிருக்கும் திறமையான வீரர்களைக் கொண்டு, தங்களுடைய சொந்த ரசிகர்களுக்கு முன்னால், தங்களுடைய சொந்த மைதானத்தில் லக்னா அணிக்கு எதிராக பெரிய நிகழ்ச்சியை நடத்த விரும்புகிறார்கள்.

கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் முன்னேறி வந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். டி20 உலகக்கோப்பை வெகு அருகில் இருக்கிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பேட்டிங்கில் சிறப்பாக திரும்பி வந்து செயல்பட்டாக வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : 2025 ஐபிஎல்-ல இதை செய்யுங்க.. இல்லனா இந்தியாவுல பவுலரே இருக்க மாட்டாங்க – அனில் கும்ப்ளே ஐடியா

அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங்கில் மிகவும் சுமாராக இருந்தார். அதே சமயத்தில் குஜராத் அணிக்கு பேட்டிங்கில் நான்காம் இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். அவர் பேட்டிங்கில் தாக்கத்தை உருவாக்கி கப்பலை நிலை நிறுத்தினார். எனவே என்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா தான் முன்னேற வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.