ரெண்டு பசங்களுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.. இனி இதை செய்யலனா தப்பிக்க முடியாது – ஷிகர் தவான் பேட்டி

0
408
Shikar

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த முறை அதிரடி ஆட்டக்காரர்களின் பேட்டிங் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அந்த அணி 64 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்தது. இந்த நிலையில் விளையாட வந்த இளம் வீரர் நித்திஷ் ரெட்டி மிகச் சிறப்பாக விளையாடி 37 பந்துகளுக்கு 64 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு மேல் வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய பங்களிப்பு செய்யவில்லை. இந்த சூழ்நிலையில் குஜராத் அணிக்கு எதிராக வெற்றி பெற்று கொடுத்த ஷஷான்க் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா இந்த போட்டியிலும் வெற்றிக்கு மிகக் கடுமையாக போராடி பரபரப்பை உண்டாக்கினார்கள்.

இந்தப் போட்டியில் உனட்கட் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. முதல் நான்கு பந்துகளை அசுடோஸ் சர்மா சந்திக்க 19 ரன்கள் கிடைத்தது. இதற்கு அடுத்த வெற்றிக்கு இரண்டு பந்தில் பத்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தில் ஒரு ரன் மட்டும் கிடைத்தது. கடைசிப் பந்தில் சிக்ஸர் வர, ஹைதராபாத் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்குப்பின் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கூறும்பொழுது “ஷஷான்க் சிங் அசுடோஸ் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் அவர்களுக்கு சரியான அளவில் ரன்கள் கொடுத்ததாக நினைத்தோம். ஆனால் நாங்கள் பவர் பிளேவில் சரியாக ரன்கள் எடுக்கவில்லை. இந்த இடத்தில்தான் நாங்கள் ஆட்டத்தை இழந்தோம். இங்கு பவுன்ஸ் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தனியான திட்டத்துடன் வர வேண்டும். நாம் அடிக்கும் முறையை மாற்றி ஆக வேண்டும். பீல்டிங் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி ஓவர் 29 ரன்.. பயம் காட்டிய ஷஷான்க் சிங் அசுடோஸ் சர்மா ஜோடி.. திரில் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி

எங்கள் அணியின் அந்த இரண்டு இளைஞர்களும் உள்ளே வந்து இவ்வளவு சிறப்பாக விளையாடுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் இவ்வளவு தூரம் ஆட்டத்தை எடுத்து வந்தது அடுத்த போட்டியை நாங்கள் எதிர்கொள்ளும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. நாங்கள் சில துறைகளை மேம்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.