ருதுராஜ் ஜடேஜாவுக்கு என்ன ஆச்சுனு பார்த்திங்க இல்ல.. தோனி எதுவும் செய்ய மாட்டார் – இர்பான் பதான் அறிவுரை

0
1122
Ruturaj

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றன. நாளை ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு இர்பான் பதான் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

நாளை நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு அதிகபட்சம் சாதகங்கள் இருக்கிறது. ஏனென்றால் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும், இல்லையென்றால் 11 பந்துகள் மீதம் வைத்து வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே இதற்கு உட்பட்டு சிஎஸ்கே தோற்றாலும் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

- Advertisement -

இப்படியான முன்னிலை சிஎஸ்கே அணிக்கு இருந்தாலும் கூட, 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை கொண்டு வந்த பொழுது சில சிக்கல்கள் எழுந்தன. அந்த வருடம் சிஎஸ்கே அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மோசமான ஐபிஎல் சீசனை சந்தித்தது.

தற்பொழுது இதை வைத்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும்பொழுது “முக்கியமான போட்டிகளை எப்படி வெல்வது என்று தெரிந்த ஒரு பரம்பரையாக சிஎஸ்கே அணி வருகிறது. தற்பொழுது முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் மற்றும் தோனி அந்த அணியை வழிநடத்தாது ஆகியவை அவர்களுக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது. மேலும் களத்திலும் தோனி எப்பொழுதாவது பீல்ட் மட்டும் அட்ஜஸ்ட் செய்கிறார்.

ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியை கேப்டனாக வழி நடத்திய பொழுது என்ன நடந்தது என்று நாம் பார்ப்போம். அது சரியான முறையில் செல்லவில்லை. அதேபோல் தற்பொழுது மீண்டும் நடக்கலாம். ஆனால் சிஎஸ்கே ரசிகர்கள் இந்த சவால்களை எல்லாம் முன்னெடுத்து சென்று அணி வெற்றி பெறும் என்று நம்புவார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா.. பிசிசிஐ அணுகியதா?.. ஐபிஎல் கமெண்ட்ரியில் வெளியான தகவல்கள்

இங்கு எதுவுமே எளிதானது கிடையாது. இரண்டு அணிகளுக்குமே எதுவும் எளிதானது கிடையாது. தற்பொழுது ஆர்சிபி அணிக்கு உறுதியான வேகம் இருக்கிறது. இந்தநிலையில் இவர்கள் வெற்றி பெற்றால், இவர்கள் கொண்டிருக்கும் வேகத்துக்கு இவர்களை விட ஆபத்தான அணி வேறு எதுவுமே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.