கடைசி ஓவர் 29 ரன்.. பயம் காட்டிய ஷஷான்க் சிங் அசுடோஸ் சர்மா ஜோடி.. திரில் போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி

0
472
IPL2024

நடப்பு ஐபிஎல் தொடரில் 23ஆவது போட்டியில் பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி 26 ரன்கள் எடுக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 21 (21) மற்றும் அபிஷேக் ஷர்மா 16 (11) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இந்த முறை இவர்களது அதிரடி ஆட்டம் எடுபடவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் 0 (2), ராகுல் திரிபாதி 11 (14), ஹென்றி கிளாசன் 9 (9) இன வரிசையாக ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த நித்திஷ் ரெட்டி மற்றும் அப்துல் சமாத் இருவரும் 20 பந்தில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அப்துல் சமாத் 25 (12) கண்களில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய நித்திஷ் ரெட்டி 37 பந்தில் 4 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஷாபாஷ் அகமத் 14* (7), கம்மின்ஸ் 3 (4), புவனேஸ்வர் குமார் 6 (8), ஜெயதேவ் உனட்கட் 6* (1) ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஸ்தீப் சிங் நான்கு ஓவர்களுக்கு 29 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 14 (16), பேர்ஸ்டோ 0 (3), பிரப்சிம்ரன் சிங் 4 (6), சாம் கரன் 29 (29), சிக்கந்தர் ராஸா 28 (22), ஜிதேஷ் சர்மா 19 (11) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நெருக்கடியான நிலைமை ஆரம்பத்திலிருந்து பேட்டிங்கில் இருந்தது.

- Advertisement -

கலக்கிய பஞ்சாப் கிங்ஸ் ஃபினிஷிங் ஜோடி

இதற்கு அடுத்து குஜராத் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ஷஷான்க் சிங் மற்றும் அசுடோஸ் சர்மா ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி கலக்கலாக ஆடி கடைசி ஓவருக்கு 29 ரன்கள் தேவை என்கின்ற நிலைக்கு ஆட்டத்தை நகர்த்தி வந்தது. கடைசி ஓவரை உனட்கட் வீச அசுடோஸ் சர்மா எதிர்கொண்டார். அந்த ஓவரில் வைடுகளோடு சேர்த்து முதல் நான்கு பந்தில் 19 ரன்கள் கிடைத்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவை என்ற பொழுது, ஐந்தாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே வர, ஆறாவது பந்தில் ஷஷான்க் சிங் சிக்ஸர் அடித்தார்.

இதையும் படிங்க : லாரா ஸார் சொன்ன அந்த வார்த்தை.. என்னோட கிரிக்கெட் வாழ்க்கையையே மாத்துச்சு – ஷஷான்க் சிங் பேட்டி

இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பரபரப்பான இந்த போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை போராடிய பஞ்சாப் கிங்சின் வெற்றிகரமான ஜோடியால் போட்டியை இந்த முறை முடிக்க முடியவில்லை. பஞ்சாப் கிங்ஸ் மேல் வரிசை பேட்ஸ்மேன்கள் செய்த தவறால், வெல்ல வேண்டிய போட்டியை தோற்று இருக்கிறார்கள். ஷஷான்க் சிங் 46* (25), அசுடோஸ் சர்மா 33* (15) ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் நான்கு ஓவர்களுக்கு 32 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.