அசுதோஸ் சர்மா அடிச்ச அந்த ஒரு சிக்ஸ்.. சீக்கிரம் வெற்றிக்கான ரன்னை நாங்களும் அடிப்போம் – சாம் கரன் பேட்டி

0
206
Sam

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் அசுதோஸ் சர்மா அதிரடியான பேட்டிங்கால் போட்டியை மிகவும் பரபரப்பாக மாற்றினார்.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் தோற்று பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் அதிரடியாக 78 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 14 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. வழக்கம்போல் இந்த போட்டியிலும் சசாங்க் சிங் 25 பந்துகளில் முதலில் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். அவர் பஞ்சாப் அணி 111 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். அந்த நேரத்தில் பஞ்சாப் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது.

இந்த இடத்திலிருந்து அதிரடியாக விளையாடிய அசுதோஸ் சர்மா வெறும் 28 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் குவித்து ஆட்டத்தை பஞ்சாப்அணியின் பக்கம் அப்படியே மாற்றினார். ஆனால் வழக்கம்போல் பஞ்சாப் அணி போட்டியில் வெற்றிக்கு பக்கம் நெருங்கி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தோல்விக்கு பின் பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பேசும் பொழுது “மீண்டும் ஒரு நெருக்கமான போட்டி. இந்த அணி அப்படியான போட்டிகளை விரும்புகிறது போல. ஆனாலும் தொடர்ந்து நெருக்கமான போட்டிகளில் விளையாடி தோல்வி அடைவது வருத்தமாக இருக்கிறது. தொடர்ந்து நெருக்கமான போட்டிகளில் தோல்வி வந்தால் அது வீரர்களை துவள செய்து விடும்.

- Advertisement -

இதையும் படிங்க : 14 ரன் 4 விக்கெட்.. சரிந்த பஞ்சாப்.. அசுதோஸ் ஷர்மா 28 பந்தில் காட்டிய வான வேடிக்கை.. மும்பை இந்தியன்ஸ் தட்டுத்தடுமாறி வெற்றி

அதே சமயத்தில் வழக்கம்போல் எங்கள் அணியின் ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஸ் சர்மா மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அசுதோஸ் சர்மா விளையாடிய ஆட்டம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. அவர் பும்ரா பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆடியது பார்க்க அபாரமாக இருந்தது. இவர்களிடம் பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது. இதைப்போல் நாங்களும் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். சூரியன் திரும்ப உதிக்கும். நாங்களும் வெற்றிக்கான ரன்னை அடிப்போம்” என்று கூறியிருக்கிறார்.