14 ரன் 4 விக்கெட்.. சரிந்த பஞ்சாப்.. அசுதோஸ் ஷர்மா 28 பந்தில் காட்டிய வான வேடிக்கை.. மும்பை இந்தியன்ஸ் தட்டுத்தடுமாறி வெற்றி

0
223
IPL2024

இன்று ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷான் 8(8), ரோகித் சர்மா 36(25) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் மிகச் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 78 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

கடைசி கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய ரன்கள் எந்த பேட்ஸ்மேன் இடம் இருந்து வரவில்லை. திலக் வர்மா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 18 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 34 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி ஆரம்பத்திலேயே காத்திருந்தது. அந்த அணி முதல் நான்கு விக்கெட்டுகளை 14 ரன்களுக்கு இழந்தது. இதற்கு அடுத்து வந்த ஹர்ப்ரித் சிங் பாட்டியா 13, ஜிதே ஷர்மா 9 ரன்களில் வெளியேறினார்கள். ஆனால் ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் பஞ்சாப் அணி 111 ரன்களுக்கு ஏழு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இங்கிருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்த அசுடோஸ் சர்மா சிக்ஸர்களாக அடித்து மிரட்டினார். மொத்தம் 28 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சர்மா 2 சாதனைகள்.. தோனிக்கு அடுத்த இடம்.. மும்பை இந்தியன்ஸ்க்கு ஸ்பெஷல் ரெக்கார்ட்

இதற்கு அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட் கைவசம் இருக்க 23 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா வீசிய 19 ஆவது ஓவரில் ஹர்பரித் பிரார் ஆட்டம் இழக்க மொத்தம் 11 ரன்கள் வந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் ரபாடா ரன் அவுட் ஆக ஒன்பது ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.