தற்போது பாகிஸ்தானில் பிரான்சிஸைஸ் டி20 லீக் பிஎஸ்என்எல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட், பெசாவர் சல்மி அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பெசாவர் சல்மி அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் சயிம் அயூப் இருவரும் துவக்காட்டக்காரர்களாக வந்தார்கள்.
சயிம் அயூப் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய கேப்டன் பாபர் அசாம் 63 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 111 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
பெசாவர் சல்மி அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தரப்பில் சதாப் கான் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் அணிக்கு நியூசிலாந்தைச் சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ மற்றும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் அசாம் கான் இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றியை நோக்கி அணியை கொண்டு சென்றார்கள்.
அதிரடியில் மிரட்டிய அசாம் கான் வெறும் 30 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து இஸ்லாமாபாத் அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்டது. பதினெட்டாவது ஓவரின் முடிவில் அந்த அணி நான்கு விக்கெட் இழந்து 181 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 19-ஆவது ஓவரை வீச பெசாவர் சல்மி அணியின் ஆரிப் யாகூப் வந்தார். அந்த ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்து அவர் மொத்தம் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். 181 ரன்கள் 4 விக்கெட் என்று இருந்த அணி, 183 ரன்கள் எட்டு விக்கெட் என்று சரிந்தது.
இதையும் படிங்க : “டிராவிட் சார் சொன்ன அந்த வார்த்தைதான்.. நான் நேற்று நல்ல விளையாட காரணம்” – சுப்மன் கில் தகவல்
இந்த நிலையில் கடைசி ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை இழந்து 10 ரன்கள் மட்டும் எடுத்து 193 ரன்கள் மட்டுமே இஸ்லாமாபாத் யுனைடெட் அணி எடுத்தது. எட்டு ரன்கள் வித்தியாசத்தில் பாபர் அசாம் பெசாவர் சல்மி அணி வெற்றி பெற்றது.