குஜராத்துக்கு எதிரான உத்தேச சிஎஸ்கே பிளேயிங் XI.. ருதுராஜ் அந்த 2 மாற்றங்களை செய்வாரா? – முழு அலசல்

0
222
CSK

நடப்பு 2024 17-வது ஐபிஎல் சீசனில் 10 அணிகளும் தங்கள் முதல் போட்டியில் விளையாடி முடித்திருக்கின்றன. நேற்று வரை நடைபெற்ற முடிந்திருக்கும் ஐந்து போட்டிகளிலும், சொந்த மைதானத்தில் விளையாடிய ஐந்து அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. வெளியில் சென்று விளையாடிய ஐந்து அணிகளும் தோல்வி அடைந்திருக்கின்றன.

நாளை சிஎஸ்கே அணி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி, தனது முதல் ஆட்டத்தில் வலிமையான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எல்லா வகையிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியால் சவால் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிஎஸ்கே அணி தேவைப்படும் மாற்றங்களை செய்து வலிமையாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் வெல்வது முக்கியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாளை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதிஷா பதிரனா விளையாடுவார் என்றால், யார் நீக்கப்படுவார்கள் என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. ஆர்சிபி அணிக்கு எதிராக நான்கு விக்கெட் கைப்பற்றிய முஸ்தபிசுர் ரஹமான் நீக்கப்படுவாரா? ரச்சின் ரவீந்தரா சுழல் பந்து வீசக்கூடியவர் என்பதால், மதிஷா தீக்சனா நீக்கப்படுவாரா? என்ற கேள்விகள் இருக்கிறது.

நாளை பதிரனா விளையாடுகிறார் என்றால் தீக்சனா நீக்கப்பட்டால், ஒரு மாற்றம் மட்டுமே நடைபெறும். ஒருவேளை யோசிக்காமல் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டால், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இல்லாத நிலை ஏற்படும். எனவே இந்தக் குறையைச் சரி செய்ய, துஷார் தேஷ்பாண்டேவை நீக்கி, இடது கை இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரியை கொண்டு வரலாம்.

முகேஷ் சௌத்ரி புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்து வீசுவார். மேலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதால் கடைசிக் கட்டத்திலும் பயன்படுத்தி பார்க்கலாம். மாற்றம் நடப்பதாக இருந்தால் சிஎஸ்கே அணியில் இந்த இரண்டு மாற்றங்களுக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை ருதுராஜ் தோனி போல வென்ற அணியை மாற்றாமல் செல்கிறாரா? என்றும் பார்க்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க: கில் வேற மாதிரி கேப்டனா வரப்போறாரு.. நேத்து என்ன நடந்தது தெரியுமா? – உமேஷ் யாதவ் பேட்டி

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வலிமையான உத்தேச சிஎஸ்கே பிளேயிங் லெவன் :

ருதுராஜ், ரச்சின் ரவீந்தரா, ரகானே, டேரில் மிட்சல், சிவம் துபே, சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, தோனி, தீபக் சகர், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மதிஷா பதிரனா