கில் வேற மாதிரி கேப்டனா வரப்போறாரு.. நேத்து என்ன நடந்தது தெரியுமா? – உமேஷ் யாதவ் பேட்டி

0
918
Gill

நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இரண்டாவதாக பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மீது, கடைசிக் கட்டத்தில் சிறப்பான அழுத்தத்தை உருவாக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி ஆச்சரியப்படத்தக்க வகையில் முதல் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் முறையாக கேப்டனாக சுப்மன் கில் தலைமை தாங்கி வழிநடத்தினார். நேற்று அவர் தனது பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் உண்மையில் சிறப்பாக இருந்தது. இறுதிக்கட்ட ஓவர்களுக்காக தன்னுடைய சிறந்த பந்துவீச்சாளர்களை வைத்துக் கொள்ளாமல், ரன்கள் குறைவாக இருந்த காரணத்தினால், 18-வது ஓவர் வரை சிறந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி ரன் அழுத்தத்தை உருவாக்கினார். பின் கடைசி இரண்டு ஓவர்களுக்கு ஆட்டத்தை நகர்த்தி எடுத்துச் சென்றார்.

- Advertisement -

19ஆவது ஓவரை, ஏற்கனவே ஒரு ஓவருக்கு 17 ரன்னை கொடுத்திருந்த ஸ்பென்சர் ஜான்சனுக்கு கொடுத்து, அவர் அந்த ஓவரில் எட்டு ரன்கள் மட்டுமே தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றி, திருப்புமுனையை உருவாக்க கில் கேப்டனாக பின்னணியில் இருந்தார். இதே போல் இரண்டு ஓவருக்கு 19 ரன்கள் கொடுத்திருந்த அனுபவ பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்கு கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடைசி ஓவருக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, உமேஷ் யாதவ் முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தந்துவிட்டார். ஆனால் அதற்கு மேல் மீண்டு வந்த அவர் இரண்டு விக்கெட்டை கைப்பற்றி மேற்கொண்டு இரண்டு ரன்கள் மட்டுமே தந்து, குஜராத் டைட்டன்ஸ் அணி பரபரப்பான போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெல்வதற்கு தன்னுடைய பங்களிப்பை செய்தார்.

இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறும்பொழுது ” நேற்று நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஆசிஸ் நெக்ரா பாய் வந்து கடைசி ஓவரை நான்தான் வீச வேண்டும் என்று கூறினார். நான் முதல் இரண்டு பந்திலேயே பத்து ரன் கொடுத்து விட்டேன். ஆனால் கேப்டன் கில் என்னிடம் எதற்கும் கவலைப்பட வேண்டாம் உங்களால் முடியும் என்று கூறினார். உங்களுடைய கேப்டன் மற்றும் அணியின் துணை ஊழியர்கள் அனைவரும் உங்களை நம்பும் பொழுது, இப்படியான நிலைமைகளில் உங்களால் சிறப்பானதை செய்ய முடிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க: இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 2வது பெரிய வெற்றி.. பங்களாதேஷ் அணிக்கு சொந்த மண்ணில் சம்பவம்

இந்த ஆடுகளத்தில் பந்தை வெளியில் வீசுவதால் எந்த நன்மையும் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். எனவே நான் அடுத்து நேருக்கு நேராக வீசுகின்ற அடிப்படைக்கு திரும்பினேன். நேற்று கில்லுக்கு கேப்டனாக முதல் போட்டியாக இருந்தாலும் அவர் காட்டிய முதிர்ச்சிமற்றும் புத்திசாலித்தனம் அருமையாக இருந்தது. அவர் எல்லோரிடமும் பேசி, தன்னிடம் இருக்கும் பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்துவது என்று வியூகம் வகுத்துக் கொண்டார். அவர் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடும் பொழுது, அவர் இன்னும் சிறந்த கேப்டனாக உருவாகி வருவார்” என்று கூறியிருக்கிறார்.