விராட் பிளேசிஸ் பெரிய வேலை பாத்துட்டாங்க.. இங்க பேட்டிங் பண்றது சாதாரண விஷயம் கிடையாது – கேமரூன் கிரீன் பேட்டி

0
1883
Green

இன்று ஐபிஎல் தொடரில் தங்களின் கடைசி போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதி வருகின்றன. இந்த போட்டியில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி ரன் குவித்தது. இது குறித்து அந்த அணியின் கேமரூன் கிரீன் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர் சி பி அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 58 பந்துகளில் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. விராட் கோலி 29 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு அதிகபட்ச சாதகத்துடன் காணப்பட்டது. நான்காவது ஓவரில் இருந்து இதை கணித்த ஆர்சிபி துவக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பான முறையில் மேற்கொண்டு விளையாடி நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து கேப்டன் பாப் டு பிளேசிஸ் 39 பந்தில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரஜத் பட்டிதார் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி அதிரடியாக 28 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தது. ரஜத் பட்டிதார் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.

இதைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 14 ரன்கள், மேக்ஸ்வெல் 5 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கடைசி வரை களத்தில் நின்று விளையாடிய கேமரூன் கிரீன் 17 பந்தில் 38 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. சர்துல் தாக்கூர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

போட்டியின் முதல் பகுதி முடிவுக்கு பின் பேசிய கேமரூன் கிரீன் “நிச்சயமாக இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமானது கிடையாது மிகவும் கடினமானது. இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் இருந்தது. நாங்கள் பந்து வீசும் பொழுதும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். மழைக்குப் பிறகு நிலைமைகள் மாறுவது வேடிக்கையான ஒன்று.

இதையும் படிங்க : கோலி 2 சிக்ஸ்.. துஷாரை டோஸ் விட்டு.. கண்ணாலே திட்டத்தை மாற்றிய தோனி.. உடனே கிடைத்த ரிசல்ட்

சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் விராட் மற்றும் பாப் இருவரும் ஒரு நல்ல அடித்தளத்தை கொடுத்தார்கள். அவர்கள் இருவருமே நிலைமையை நன்றாக மதிப்பீடு செய்தார்கள். முதலில் பேட்டிங் செய்யும் பொழுது நீங்கள் எந்த ஸ்கோரையும் மனதில் வைத்து விளையாட முடியாது. நாம் தொடக்கத்திலிருந்து ஷார்ட்கள் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.