தோனி ஹீரோவானது மீடியாவால்தான்.. கம்பீர் பேச்சை ஆதரித்த இந்திய முன்னாள் வீரர்.. மீண்டும் சலசலப்பு

0
257
Dhoni

கிரிக்கெட்டில் நீண்ட காலமாக மகேந்திர சிங் தோனிக்கு வெகுஜன மக்களிடையே இருக்கும் பிரபலத்தன்மை குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதுகுறித்து எப்பொழுது எல்லாம் அவரிடம் கேள்விகள் முன்வைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர் தயங்காமல் நேரடியாக இந்த விஷயத்தை கூறி வருகிறார்.

இதன் காரணமாக மகேந்திர சிங் தோனி மீது கௌதம் கம்பீர் பொறாமையால் பேசி வருகிறார் என்று ஒரு பெரிய தரப்பும், அவர் கூறுவது உண்மைதான் என ஒரு சிலரும் சமூக வலைதளத்தில் அவருக்கு எதிர்ப்பு ஆதரவு என்று கருத்துக்களை பதிவு செய்வார்கள். பெரும்பாலும் அவரது கருத்துக்கு எதிர்ப்புகள் வருகின்ற பொழுதும் கூட, அவர் தன்னுடைய கருத்திலிருந்து இதுவரை பின்வாங்கியது கிடையாது. மேலும் எப்பொழுது தோனி குறித்தான உலகக்கோப்பை வெற்றி குறித்தான கேள்வி கேட்கப்பட்டாலும் அவர் ஒரே மாதிரியான பதில்களையே சொல்லி வருகிறார்.

- Advertisement -

கவுதம் கம்பீர் இது குறித்தான பேச்சின் போது ” இந்தியாவில் தனி நபர் வழிபாட்டு முறை ஒழிய வேண்டும். அது விளையாட்டாக இருந்தாலும் சரி இல்லை அரசியலாக இருந்தாலும் சரி தனி நபர்களை வணங்குவது கூடாது. அங்கு முதன்மையாக இருக்க வேண்டியது விளையாட்டு மற்றும் அரசியல்தான்.

நாம் உண்மையில் வணங்க வேண்டும் என்றால், விளையாட்டையும், நாட்டையும்தான் வணங்க வேண்டும். ஆனால் இங்கு வெகுகாலமாக அப்படியான முறை கிடையாது. தனி நபர்களை வணங்குவதும் பெரிய அளவில் பேசுவதும்தான் தொடர்ந்து இருந்து வருகிறது. இதில் மீடியாக்களும் பிராட்காஸ்டர்களும் பெரிய பங்கு வகிக்கிறார்கள். உலகக் கோப்பை வெற்றி என்பது ஒரு நபரால் வந்தது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

ஒரு பேட்டியில் இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமாரிடம் இது குறித்து கேட்ட பொழுது “கவுதம் பாய் கூறுவது முற்றிலும் சரி. கிரிக்கெட் என்பது மல்யுத்தம் போன்ற தனி நபர் விளையாட்டு கிடையாது. ஒரு வீரரால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது. யுவராஜ் சிங் சிறப்பாக பேட்டிங் செய்து 15 விக்கெட் எடுத்தார். ஜாகீர் கான் 21 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதேபோல் கம்பீர் 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரன்கள் எடுத்தார். தோனி 2011 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ரன்கள் எடுத்தார். ஒரு அணியில் மூன்று பேட்ஸ்மேன்கள் ஃபார்மில் இருந்து ரன் எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பந்துவீச்சாளர்களாவது விக்கெட்டுகள் கைப்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் ஒரு அணியால் வெற்றி பெற முடியும். கிரிக்கெட்டின் எந்த வடிவத்திலும் ஒரு போட்டியை ஒரு வீரராக வெல்லவே முடியாது” எனக்கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : காயமான ஃபாஸ்ட் பவுலருக்கு பதிலா மிரட்டல் பேட்ஸ்மேனை வாங்கிய டெல்லி.. என்னதான்யா நடக்குது

ஐபிஎல் தொடங்க சில நாட்களே இருக்கின்ற நிலையில், இந்த ஐபிஎல் தொடர் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கலாம் என்கின்ற நிலையில், கம்பீர் மற்றும் பிரவீன் குமார் பேச்சுகள் மீண்டும் சமூக வலைதளத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. மீண்டும் இதற்கான எதிர்ப்பு ஆதரவு என சமூக வலைதளம் களைகட்டி இருக்கிறது.