காயமான ஃபாஸ்ட் பவுலருக்கு பதிலா மிரட்டல் பேட்ஸ்மேனை வாங்கிய டெல்லி.. என்னதான்யா நடக்குது

0
183
DC

எதிர்பாராத விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் 2022 ஆம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைய, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டனும் விக்கெட் கீப்பருமான அவரை டெல்லி கேபிடல்ஸ் அணி இழந்தது.

ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இல்லாதது கடுமையாக அந்த அணியை பாதித்தது. டேவிட் வார்னர் தலைமையில் முதல் வெற்றிக்கு மிகவும் போராடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை வெகு சீக்கிரத்தில் இழந்து, கடந்த ஐபிஎல் தொடரில் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த முறை 12 வீரர்களை மினி ஏலத்தில் கழட்டிவிட்ட அந்த அணி நிர்வாகம், விக்கெட் கீப்பர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறிவைத்து புதிய அணியை உருவாக்கி இருக்கிறது. தற்போது ஓரளவுக்கு மற்ற அணிகளுக்கு சவால் தரக்கூடிய வகையில் டெல்லி அணி தெரிகிறது.

இந்த நிலையில் டெல்லி அணியில் 4 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருந்த இங்கிலாந்து இளம் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் குடும்ப விவகாரம் தொடர்பாக நடக்க இருக்கின்ற ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகிக் கொண்டார். இவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையாவது டெல்லி வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று முன்தினம் இவருடைய இடத்திற்கு ஆஸ்திரேலியாவின் இளம் அதிரடி ஆட்டக்காரர், டாஸ்மெனியா அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் 29 பந்தில் சதம் அடித்த ஜாக் பிரேசர் மெக்கர்க்கை டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்குகிறது என்கின்ற செய்திகள் பரவலாக வெளியில் வந்தன. இந்த இளம் வீரர் இந்திய மண்ணில் சாதிக்க முடிந்தால் அது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது. டேவிட் வார்னர் ஓய்வுக்கு அடுத்து இவர் அந்த இடத்தை நிரப்பலாம்.

- Advertisement -

இந்த நிலையில் டெல்லி அணியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி காயம் அடைந்திருப்பதாக செய்திகள் வந்தன. இப்படியான நிலையில் இவருடைய இடத்திற்கு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை டெல்லி கேப்பிட்டல் அணி தேடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இதையும் படிங்க : 24.75 கோடி எதுவும் பண்ணாது.. கேகேஆர் எக்ஸ்-பேக்டர் இவர்தான் – புது மென்டர் கம்பீர் பேச்சு

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி இடத்துக்கு அதிரடி துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் டெல்லி அணியால் வாங்கப்பட்டு இருக்கிறார். ஹாரி புரூக் இடத்திற்கு யாரை வாங்குவார்கள் என்பது குறித்து தெரியவில்லை. ஒருவேளை மீண்டும் அவரிடம் பேச்சு வார்த்தை செல்கிறதா? என்றும் தெரியவில்லை. அப்படியே பேச்சுவார்த்தை சென்றாலும் கூட வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் தேவையாக இருக்கிறார். டெல்லி அணி என்ன நினைக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை என்பதுதான் உண்மை.