“பணம் முக்கியம்தான்.. அதுக்காக இப்படி அலையக்கூடாது.. ரோகித் சிறப்பானவர்” – ஹர்திக் பாண்டியா மீது பிரவீன்குமார் விமர்சனம்

0
297
Hardik

17ஆவது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதற்கு முதல் பதினைந்து நாட்களுக்கான போட்டி அட்டவணைகள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் காலம் என்கின்ற காரணத்தினால், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அரசிடம் இருந்து வந்த பிறகு, அதை வைத்து அதற்கு ஏற்றார் போல் மீது அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களது முழுமையான வீரர்களை படிப்படியாக வரவைத்து தீவிரமாக பயிற்சி செய்ய ஆரம்பித்து இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு அணிகளின் பயிற்சி முகாமில் இருந்தும் ஒவ்வொரு செய்திகள் ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தும் விதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்ததோடு, அடுத்த பத்து நாட்கள் எப்பொழுது நகரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கும் மற்றும் அணி நிர்வாகத்திற்கும் நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் வித்தியாசமான ஒன்றாக அமைய இருக்கிறது. அந்த அணிக்காக பத்து ஆண்டுகளில் ஐந்து முறை கேப்டன் பொறுப்பில் இருந்து கோப்பையை வென்ற ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்கி இருக்கிறது.

இதைவிட மிக முக்கியமாக கேப்டன் பொறுப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே இருக்கும் பும்ரா மற்றும் சூரிய குமாரிடம் செல்லாமல், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேடிங் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். இது அணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது அத்தோடு வெளியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடம் வெளிப்படையாக எதிர்ப்பை சம்பாதித்து இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக காலில் காயமடைந்து வெளியேறினார். அதற்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடவோ இல்லை உள்நாட்டு மாநில அணிக்காகவோ விளையாட செய்யவில்லை. அவர் மும்பையில் நடைபெற்ற டிஒய்.பாட்டில் டி20 டிராபியில் விளையாடினார். தற்பொழுது நேரடியாக மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார் கூறும் பொழுது ” ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நீங்கள் காயமடைகிறீர்கள். அதற்குப் பின்பு நீங்கள் நாட்டிற்காகவும் விளையாட மாட்டீர்கள். உள்நாட்டு மாநில அணிக்காகவும் விளையாட மாட்டீர்கள். நேரடியாக ஐபிஎல் தொடரில் மட்டும்தான் விளையாடுவீர்கள். இது சரியான முறை கிடையாது. இப்படி எல்லாம் நடக்கக்கூடாது.

பணம் சம்பாதிப்பது முக்கியம்தான், அது தவறு கிடையாது. ஆனால் நீங்கள் உங்கள் நாட்டு அணிக்காகவும் மேலும் மாநில அனிக்காகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவர்கள் இப்படி செய்வதால் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் தருவது அதிகரித்துவிட்டது.

இதையும் படிங்க : “கில் என்கிட்ட வம்புக்கு வரல.. நான்தான் போனேன்.. இதான் நடந்துச்சு” – உண்மையை உடைத்த ஆண்டர்சன்

ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகச் சிறப்பான கேப்டனாக தொடர முடியும். ஒரு ஆண்டு மட்டும் கிடையாது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் கூட அவர் அந்த அணிக்கு கேப்டனாக தொடர முடியும். ஆனால் இறுதி முடிவு என்பது அணி நிர்வாகத்தின் கைகளில்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.