“கில் என்கிட்ட வம்புக்கு வரல.. நான்தான் போனேன்.. இதான் நடந்துச்சு” – உண்மையை உடைத்த ஆண்டர்சன்

0
661
Anderson

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 700 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டை கைப்பற்றி உலக சாதனை படைத்தார். முதன்முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 ஆவது விக்கெட்டை கைப்பற்றிய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்கின்ற அரிய சாதனை அவருக்கு கிடைத்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட் களத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளராக 22 வருடங்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார். பேட்ஸ்மேனாக மற்றும் ஸ்பின்னர் ஆக ஒருவர் இத்தனை ஆண்டு காலம் கிரிக்கெட் களத்தில் இருக்கிறார் என்றால் அது பெரிய ஆச்சரியம் கிடையாது.

- Advertisement -

ஆனால் மிக அதிகப்படியான உழைப்பை கொட்ட வேண்டிய வேகப்பந்து வீச்சு துறையில் இருந்து கொண்டு 41 வயதில் தொடர்ந்து முன்னணி அணியில் முன்னணி அணிகளுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுவது என்பது இனி கிரிக்கெட் உலகில் நடக்காத விஷயம் என்று கூறலாம். இந்த வகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டின் வியப்பான வீரர்.

கடைசி டெஸ்ட் போட்டியில் அவருக்கும் சுப்மன் கில்லுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்பொழுது சுப்மன் கில் நூறு ரன்கள் தாண்டி விளையாடிக் கொண்டிருந்தார். அன்றைய நாளின் முதல் செஷன் போதும் ஜேம்ஸ் ஆண்டர்சனை தாக்கி விளையாடுவதை கில் நோக்கமாக வைத்திருந்தார். இதேபோல் மதிய உணவு இடைவேளைக்கு சென்று வந்த பின்பும், ஆண்டர்சனையை குறிவைத்து அடித்தார். அப்போதுதான் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதுகுறித்து பேசி இருந்த கில் கூறும் பொழுது ஆண்டர்சனை தாக்கி விளையாடி அவர்களது பந்துவீச்சாளர்களை பின் தள்ள வேண்டும் என்பது தன் நோக்கமாக இருந்தது என்றும், தங்கள் இருவருக்குள்ளும் நடந்த உரையாடல், தங்களுக்குள் இருப்பதுதான் நல்லது என்றும் கூறியிருந்தார். இதனால் என்ன நடந்தது என்பதை தாண்டி, யார் யாரிடம் பேச்சுவார்த்தையை தொடங்கினார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : IRE vs AFG.. 8 விக்கெட் 26 ரன்கள்.. வாய்ப்பை நழுவ விட்ட அயர்லாந்து.. ODI தொடரை வென்ற ஆப்கான்

இதுகுறித்து தற்பொழுது ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறும் பொழுது ” நான் தான் அவரிடம் ‘இந்தியாவுக்கு வெளியே எங்காவது ரன்கள் அடித்திருக்கிறீர்களா?’ என்று முதலில் பேசினேன். அவர் என்னிடம் பதிலுக்கு இது உங்களுக்கு ஓய்வு பெறுவதற்கான சரியான வயது என்று கூறினார். அடுத்த நாள் சில பந்துகளில் அவரை அவுட் செய்தேன்” என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து களத்தில் கில் எதையும் ஆரம்பிக்கவில்லை என்றும், அதே சமயத்தில் மிக நாகரீகமாக நடந்தது இருவருக்குள்ளுமே இருக்கட்டும் என்று கூறியிருப்பதும் தெரிகிறது.