இத சொல்லி வச்சு மும்பையை ஜெயிச்சோம்.. என்கிட்ட சொன்ன மாதிரி பிட்ச் இல்ல – வருண் சக்கரவர்த்தி பேட்டி

0
30
Varun

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒருங்கிணைந்து விளையாடி அசத்தலாக வீழ்த்தி வென்றது. மேலும் இந்த மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக பத்து முறை மோதி 9 முறை தோற்ற கொல்கத்தா அணி, 12 வருடம் கழித்து மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தச் சிறப்பான வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர் வரும் சக்கரவர்த்தி பேட்டி அளித்திருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள், மணிஷ் பாண்டே 41 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. மும்பை ஆடுகளம் வழக்கமாக பவுன்ஸ் உடன் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இல்லை. இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் குறைவாகவும் பந்து கொஞ்சம் நின்றும் வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது பனிப்பொழிவு வந்து பேட்டிங் செய்ய நிலைமை சாதகம் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் வரும் சக்கரவர்த்தி நமன் திர் மற்றும் திலக் வர்மா விக்கெட்டை வீழ்த்த, சுனில் நரைன் ரோகித் சர்மா மற்றும் வதேரா விக்கெட்டை வீழ்த்த, மும்பை அணி வசமாக சிக்கியது. பின்பு ரசல் 2 விக்கெட் ஸ்டார்க் 4 விக்கெட் வீழ்த்த, மும்பை அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கொல்கத்தா அணி பஞ்சாப் அணிக்கு எதிராக தங்களது சொந்த மைதானத்தில் 261 ரன்கள் பேட்டிங்கில் முதலில் எடுத்து, பின்பு தங்களது பந்துவீச்சில் அந்த ரன்களை பாதுகாக்க முடியாமல் பஞ்சாப் அணியிடம் வரலாற்று தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அந்த அணியினர் கொஞ்சம் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள். இந்த வெற்றி அவர்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி பேசும்பொழுது “12 வருடங்களுக்குப் பிறகு மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் வெல்வது சிறந்த உணர்வை கொடுக்கிறது. நாங்கள் இன்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். வெற்றிக்கு நடுவில் கடைசியில் ஒரு விக்கெட்தான் இருந்தது. 170 ரன்கள் என்பது கொஞ்சம் குறைவானதுதான். இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு வரும் என்று தெரியும். ஆனால் நாங்கள் எங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எங்களது திட்டங்களில் ஒட்டிக்கொண்டோம்.

- Advertisement -

இதையும் படிங்க: நான் ஸ்டார்க் கிட்ட இதை பேசி புரிய வச்சேன்.. இம்பேக்ட் பிளேயர் ரூல்தான் காப்பாத்துச்சு – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

பந்துவீச்சில் இரண்டாம் பகுதியில் பெரிய அளவில் பந்து திரும்பவில்லை. மேலும் பந்து நின்று வருகிறது என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் நான் பந்து வீசும் பொழுது பந்து நன்றாகவே சென்றது. சுனில் நரைன் எப்பொழுதும் ஒரே மாதிரி மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். அவருடன் இணைந்து பந்து வீசுவது மகிழ்ச்சியான ஒன்று. வெங்கடேஷ் மற்றும் பாண்டே இருவரும் தங்கள் தோள்களில் போட்டியை தாங்கி எடுத்து வந்தார்கள். நாங்கள் பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த பிறகு இது எங்களுக்கு சிறந்த மறுபிரவேசம். நாங்கள் இதைச் செய்வோம் என்று அப்பொழுதே சொன்னோம்” என்று கூறியிருக்கிறார்.