நான் ஸ்டார்க் கிட்ட இதை பேசி புரிய வச்சேன்.. இம்பேக்ட் பிளேயர் ரூல்தான் காப்பாத்துச்சு – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

0
1504
Shreyas

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில், 12 ஆண்டுகள் கழித்து கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்யும் பொழுது ஆரம்பத்தில் முதல் ஐந்து விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்து விட்டது. இதன் காரணமாக இம்பேக்ட் பிளேயராக பந்துவீச்சாளருக்கு பதிலாக பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டேவை கொண்டு வந்தார்கள்.

- Advertisement -

மணிஷ் பாண்டே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி 62 பந்துகளில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் காரணமாக கொல்கத்தா அணி 169 ரன்கள் எடுத்தது. வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி 52 பந்தில் 70 ரன்கள் குவித்தார். பேட்டிங் செய்ய கடினமாக தெரிந்த ஆடுகளத்தில் கொல்கத்தா ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எட்டியது.

இதற்கு அடுத்து இயற்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் மட்டும் தனி ஆளாக நின்று போராடி 56 ரன்கள் எடுத்து வெற்றியை நெருங்கும் வேளையில் ஆட்டம் இழந்தார். அத்தோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியும் முடிந்துவிட்டது. அந்த அணி 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக, கொல்கத்தா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டார்க் ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் மூன்று விக்கெட் வீழ்த்தி போட்டியை முடித்தார். மொத்தமாக நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்பொழுது “நான் ஸ்டார்க் உடன் உரையாடினேன். அப்போது இந்த போட்டி எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று அவரிடம் கூறினேன். ஏனென்றால் இந்த போட்டியை தோற்று இருந்தால், அடுத்த நான்கு போட்டியில் இரண்டு வெற்றுக்களை பெற வேண்டியதாக இருக்கும். எனவே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் அழகான அவசியமான ஒன்று. மேலும் எங்களுக்கு அடுத்த நாள் ஒரு போட்டி இருக்கிறது. இம்பேக்ட் பிளேயர் விதி எங்களுக்கு பெரிதும் உதவியது.

- Advertisement -

இதையும் படிங்க : என் வெற்றிக்கு கங்குலி ஸார் தான் காரணம்.. மனிஷ் பாண்டேவுக்கு 4 முறை இப்படி நடந்திருச்சு – வெங்கடேஷ் ஐயர் பேட்டி

மணிஷ் பாண்டே தனக்கான ஒரு வாய்ப்புக்காக இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து காத்திருந்தார். இன்றுஅவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இந்த ஆடுகளத்தில் சிறப்பான ஒரு டோட்டலை பெற்றோம். நான் எங்கள் வீரர்களுக்கு எதை சொல்ல வேண்டும் என்றால், இந்த டோட்டலை வைத்து போட்டியை வெல்ல முடியும் என்றுதான். நேர்மையாக எங்களது சுழல் பந்துவீச்சாளர்கள் லைன் மற்றும் லென்த்தில் மிகச் சிறப்பாக இருந்தார்கள். மேலும் வெங்கடேஷ் ஐயர் ஒவ்வொரு போட்டியிலும் வெளியேறி சென்று தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.