“போப் அசத்திட்டார்.. நாங்க இன்னும் 40-50ரன்கள் எடுத்தாலே இந்திய அணிக்கு தலைவலிதான்” – கிரவுலி பேட்டி

0
383
Pope

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மூன்றாவது நாள் முடிவில் தற்போது இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதன் மூலம் தற்பொழுது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. மேற்கொண்டு நாளை முன்னிலையை 200 ரன்களுக்கு இங்கிலாந்து அணியால் நகர்த்த முடிந்தால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பெரிய அளவில் சவால் கொடுக்க முடியும்.

- Advertisement -

பொதுவாக ஆடுகளம் நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் பேட்டிங் செய்வதற்கு சற்று சிரமமாக மாறிவிடும். இந்தியாவில் இப்படியான கட்டத்தில் நான்காவது இன்னிங்ஸில் 200 ரன்கள் என்பது எப்பொழுதும் சவாலான ஒன்று.

போட்டி துவங்கி மூன்று நாட்களில் மொத்தம் ஒன்பது செஷன்கள் நடைபெற்று இருக்கிறது. இதில் முதல் ஏழு செஷன்களை இந்திய அணி கைப்பற்றி இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை உள்ளே விடாமல் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆனால் இன்றைய நாளின் கடைசி இரண்டு செஷன்களில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு போட்டி வந்திருக்கிறது. ஆட்டம் இழக்காமல் 199 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து போப் இங்கிலாந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி கூறும் பொழுது ” இன்றைய நாள் முடிவில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். போப் நம்ப முடியாத ஒரு சிறப்பான இன்னிங்ஸ் விளையாடியிருக்கிறார். நாளை காலை நாங்கள் இன்னும் சில ரன்கள் எடுத்தால் இந்தியா அதை துரத்துவதற்கு சவாலாக இருக்கும்.

நாங்கள் பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸ் எப்படி விளையாட வேண்டும் என்று நினைத்தோமோ, அதேபோல் தான் இரண்டாவது இன்னிங்ஸையும் நாங்கள் விளையாடியிருக்கிறோம். இந்த வேலையை எங்கள் வீரர்கள் மிக மகிழ்ச்சியுடன் செய்திருக்கிறார்கள்.

அஸ்வின் இடம் நான் இந்த போட்டியில் இரண்டாவது முறையாக வீழ்த்தப்பட்டிருக்கிறேன். அவர் இன்று எனக்கு ஒரு சிறந்த பந்தை வீசினார். அவர் அந்த வேலையை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டவராக இருக்கிறார்.

இதையும் படிங்க : 156 ரன்.. 8 விக்கெட்.. ஆஸியை வீழ்த்தி வரலாறு படைக்குமா வெஸ்ட் இண்டீஸ்.. விறுவிறுப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்

ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் இந்த ஷாட்களில் நாங்கள் நிறைய முன்னேறி இருக்கிறோம். இதை விளையாடுவதின் மூலமாக பந்துவீச்சாளர்களை நாங்கள் கொஞ்சம் ஷார்ட்டாக வீசவைக்க முடியும்.

மேற்கொண்டு நாளை நாங்கள் 40 – 50 ரன்கள் எடுத்தாலே இந்தியாவுக்கு அது கடினமான ஒன்றாக மாறும். ரேகான் அகமத் அற்புதமான திறமையை வைத்திருக்கிறார். மேலும் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவரால் நாளை காலை கொஞ்சம் ரன்கள் எடுக்க முடியும்” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.