கொஞ்சம் கேப்டன் ருதுராஜையும் காட்டுங்க.. வீரேந்தர் சேவாக் ஓப்பன் டாக்.. தோனி ரசிகர்கள் கோபம்

0
1399

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. 17வது சீசனின் முதல் போட்டியில் மஞ்சள் படையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சிவப்புப் படையான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் களத்தில் மோதின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக பதவி விலகியதைத் தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இளம்வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்பட்டது. அனுபவமே இல்லாத ஒரு வீரரிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பது அவரின் ஆட்டத்திறனை பாதிக்குமா? என்ற வகையில் விவாதங்கள் நடைபெற்றது.

- Advertisement -

ஆனால் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேப்டன் ருத்ராட்ச் கெயிக்வாட் சென்னை அணியை மிக அற்புதமாக வழி நடத்தினார். முதல் ஆறு ஓவர்களில் பெங்களூர் அணியின் கை ஓங்கி இருந்த நிலையில், பந்துவீச்சில் மாற்றம் செய்து மேலும் பீல்டிங் செட்டப்புகளையும் மாற்றியமைத்து விரைவிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த உதவினார்.

இதுவே பெங்களூர் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தது. நட்சத்திர ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை விரைவிலேயே வீழ்த்தி விட்டதால், அந்த அணியினால் பெரிய ரன்களைக் குவிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்களில் 173 ரன்கள் மட்டுமே குவித்தது. பவர் பிளேவில் பெங்களூர் அணி விளையாடிய விதத்தைப் பார்த்து 200 ரன்களுக்கு மேல் சென்று விடும் என்று அனைவரும் கருதினர்.

ஆனால் சென்னை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் பெங்களூர் அணியின் ரன் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி 19ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை அடைந்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத நிலை பெங்களுர் அணிக்கு இன்னமும் நீடிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ‘முதல் 26 பந்துகளுக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே அணி எழுச்சி பெற்றது. அழுத்தத்தின் கீழ் ருத்ராஜின் பந்துவீச்சு மாற்றங்கள் சுவாரசியத்தை கொடுத்தன’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இவர் இவ்வாறு பதிவிட்டு இருக்க, முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் தனது கருத்தை நேரலையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தோனி எல்லா மேட்ச்சும் ஆடமாட்டார்.. ஏன்னா காரணம் இதுதான்.. ஆனாலும் – கிறிஸ் கெயில் பேட்டி

“அண்ணே.. ருத்ராஜ் முகத்தையும் காட்டுங்க அவர்தான் கேப்டன் தோனி யோட முகத்தை மட்டும் காட்டாதீங்க” என்று கிண்டலாக பதிவிட்டு இருக்கிறார். மேலும் அவர் கூறும் வகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கேமராக்களும் தோனியின் முகத்தை அவ்வப்போது பளிச்சிட்டது. எனவே இவரது நகைச்சுவையான பேச்சை ரசிகர்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றனர். மேலும் இதனைக் கண்ட தோனியின் சில ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.