தோனி எல்லா மேட்ச்சும் ஆடமாட்டார்.. ஏன்னா காரணம் இதுதான்.. ஆனாலும் – கிறிஸ் கெயில் பேட்டி

0
6224
Dhoni

நேற்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் சிஎஸ்கே அணி தனது புதிய கேப்டனான ருதுராஜ் தலைமையில் முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறது. நேற்று முன்தினம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்ட மகேந்திர சிங் தோனி, புதிய கேப்டனாக ருதுராஜை கொண்டு வந்தார்.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக இதுபோல கொண்டு வந்த பொழுது, மகேந்திர சிங் தோனியின் திட்டம் சரிவர செல்லவில்லை. ரவீந்திர ஜடேஜா தாக்கத்தை தரக்கூடிய மிகச்சிறந்த வீரராக இருந்த போதிலும், அவரால் கேப்டன்சி கொடுக்கும் அழுத்தத்தை சமாளித்து சரியான முடிவுகள் எடுக்க முடியவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக அவர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் பாதியில் காயம் என்று கூறி வீட்டிற்கு சென்று விட்டார். மேலும் கடல் ஆண்டு ஐபிஎல் தொடர் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவாரா? என்கின்ற சந்தேகமும் இருந்தது. அன்பு மகேந்திர சிங் தோனி சமாதானத்தில் உள்ளே வந்தார்.

ருதுராஜ் கேப்டனாக வந்தது இதனால்தான்

தற்போது சிஎஸ்கே புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கும் ருதுராஜுக்கும் அதேபோல நடக்குமா என்கின்ற பயம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் புதிய கேப்டன் ருதுராஜ் கேப்டன் பொறுப்பை நேற்று நல்ல முறையில் செய்திருந்தார். பெரிய குறை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே ருதுராஜ் தொடர்ந்து சிஎஸ்கே கேப்டன் பொறுப்பில் நீடிப்பது உறுதி ஆகி இருக்கிறது. குறைந்தபட்சம் 5, 6 ஆண்டுகள் அவர் நீடிக்கலாம். எனவே தற்போதைய நிலையில் சிஎஸ்கே அணி பாதுகாப்பானதாகவும் பலமானதாகவும் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி நடைபெற இருக்கும் ஐபிஎல் சீசனில் எல்லா போட்டிகளிலும் விளையாடுவாரா? என்பது ரசிகர்களிடையே இன்னும் தீராத சந்தேகமாக இருந்து வருகிறது. சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மகேந்திர சிங் தோனியின் உடல் தகுதி மிகச் சிறப்பாக இருப்பதாகவும், அவர் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும் எனவே அவர் தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : 2023-ல இருந்தே நானும் ஜடேஜாவும் நாட் அவுட்தான்.. மஹி பாயிடம் கத்துக்கிட்டது இதைத்தான் – சிவம் துபே பேச்சு

இந்த நிலையில் கரீபியன் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் இதுகுறித்து கூறும் பொழுது “தோனி எல்லா போட்டிகளிலும் விளையாட முடியாமல் இருக்கலாம். அவருக்கு ஐபிஎல் தொடரின் நடுவே சிறிது ஓய்வு தேவைப்படலாம். இந்த காரணத்திற்காகத்தான் முன்கூட்டியே அவர் ருதுராஜை கேப்டனாக கொண்டு வந்திருக்கிறார். இதற்காகவே புதிய கேப்டன் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். தோனியின் விஷயங்கள் நல்லபடியாகவே செல்லும் என்று நம்பலாம்” என்று கூறி இருக்கிறார்.