ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரா கத்துறாங்க.. எங்க கையில என்ன இருக்கு.. நாங்க என்ன பண்ண? – பியூஸ் சாவ்லா பேட்டி

0
303
Hardik

நடப்பு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி பேப்பரில் மிக வலிமையான அணியாக மாறியது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலமாக கொண்டு வந்தார்கள். மேலும் அணிக்கு தேவையான சிறந்த வெளிநாட்டு வேகப் பந்துவீச்சாளர்களை வாங்கினார்கள். இதன் காரணமாக கோப்பையை வெல்வதற்கான அதிக வாய்ப்பு இருக்கும் அணியாக கணிக்கப்பட்டது.

அதே சமயத்தில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து மும்பைக்கு திடீரென வந்தது, ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வந்த காரணத்தினால் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு அவரிடம் கொடுக்கப்பட்டது, இப்படி எல்லா விஷயங்களும் சேர்ந்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராகவும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு எதிராகவும் மாறியது.

- Advertisement -

இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்கள் மைதானத்தில் கத்தினார்கள். இதைவிட அதிர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த பொழுது அந்த அணியின் ரசிகர்களே அதை வரவேற்று ஆரவாரம் செய்தார்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது எப்பொழுதும் ஐபிஎல் வரலாற்றில் நடக்காத ஒன்று. மேலும் ஒரு நட்சத்திர இந்திய வீரருக்கு, இந்தியாவில் இந்திய ரசிகர்களிடம் இப்படி நடப்பதும் இதுதான் முதல் முறை. இதன் காரணமாக இதை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல், ஹர்திக் பாண்டியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இருவருமே தடுமாறி வருகிறார்கள். மேலும் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது விமர்சனங்களை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பியூஸ் சாவ்லா கூறும் பொழுது “ரசிகர்கள் விஷயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் அது எங்கள் கைகளில் இல்லாத விஷயம். எனவே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் கூற முடியாது. ஹர்திக் இதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். கூட்டம் என்ன செய்கிறது என்பதை பற்றி அவர் கவலைப்படவில்லை. நாங்கள் வெற்றி பெற்றால் விஷயங்கள் வித்தியாசமாக நடக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : நேத்து தோனி ஜெயிக்க விளையாடல.. அங்க நடந்ததே வேற.. அவர் முகத்தை பார்த்திங்களா? – அம்பதி ராயுடு பேட்டி

மேலும் இந்த விஷயத்திற்கு நாங்கள் பழகி விட்டோம். மேலும் உங்களுக்கு நன்றாக தெரியும் மக்கள் கூட்டத்தில் என்ன நடந்தாலும் உங்களால் அதற்கு எதுவுமே செய்ய முடியாது. ஏனென்றால் அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. நாங்கள் எங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். கூட்டம் என்ன செய்கிறதோ செய்து கொள்ளட்டும். நாங்கள் எங்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினால் போதும்” எனக் கூறியிருக்கிறார்.