நேத்து தோனி ஜெயிக்க விளையாடல.. அங்க நடந்ததே வேற.. அவர் முகத்தை பார்த்திங்களா? – அம்பதி ராயுடு பேட்டி

0
1000
Ambati

நேற்று இரவு முதல் ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த விவாதங்களையும், கவனத்தையும் தன் பக்கமாக தோனி திருப்பியிருக்கிறார். டெல்லிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் எட்டாவது இடத்தில் வந்து 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன், அதிரடியாக 37 ரன்கள் எடுத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு திடீர் திருவிழாவை உண்டாக்கி விட்டு சென்றிருக்கிறார்.

இதன் காரணமாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தாண்டி பிரெட் லீ போன்ற நட்சத்திரம் முன்னாள் வீரர்கள் தோனி பேட்டிங் வரிசையில் மேலே வந்து பேட்டிங் செய்ய வேண்டும், அவர் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கிறார், அவரிடம் இருந்து தாங்கள் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறோம் என்று அன்பு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

- Advertisement -

தோனி பேட்டிங் மேல் வரிசையில் வருவாரா? அவருடைய மனதில் என்ன மாதிரியான முடிவுகள் இருக்கும்? என்பது குறித்து அவருடன் சிஎஸ்கே அணியில் நீண்ட வருடங்கள் இணைந்து விளையாடிய அம்பதி ராயுடு மிகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதிலும் நேற்றைய போட்டியில் அவர் விளையாடிய விதத்தை வைத்து, யாரும் கூறாத சில முக்கியமான விஷயங்களை ஆழமான பார்வையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அம்பதி ராயுடு கூறும் பொழுது “நேற்று அவர் விளையாடியதற்குப் பிறகு, நிச்சயமாக பேட்டிங்கில் மேல் வரிசையில் அவர் வர மாட்டார் என்று என்னால் கூற முடியும். ஏனென்றால் இப்பொழுது அவர் சிஎஸ்கே அணிக்காக கீழ் வரிசையில் வந்து ஆட்டத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை பெற்று விட்டார். எனவே தோனி பாய் மேலே வந்து விளையாடுவார் என்கின்ற நம்பிக்கைக்கு இது ஒரு பின்னடைவான விஷயமாகும்.

நேற்றைய போட்டியில் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். பெரிய போட்டிக்கு முன்பாக அவருக்கு ஒரு பயிற்சி தேவைப்படுகிறது. ஏனென்றால் பிளே ஆப் சுற்றுகளில் இப்படியான நிலைமை வரலாம் என்று அவருக்குத் தெரியும். இதற்குத்தான் அவர் நேற்று தன்னை தயார் படுத்திக் கொண்டார். பெரிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பந்தை வெளியே அடிக்க முடியுமா? என்று தன்னைத்தானே சோதித்துக் கொண்டார். நேற்று அவர் விளையாடிய பொழுது அவரது முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. அவருக்கு போட்டியை முடிக்கும் நம்பிக்கை வந்து விட்டது இது காட்டுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பழைய தோனி இல்ல .. அந்த ஒரு விஷயத்தால இது புது தோனி.. நேற்று சிஎஸ்கேதான் ஜெயிச்சது – ஸ்ரீகாந்த் பேட்டி

ஒவ்வொரு அணியும் இனிமேல் பயப்பட வேண்டும்.ஏனென்றால் இவர் கடைசி ஐந்து ஓவர்களுக்கு நிச்சயம் வருவார். மேலும் 2005 ஆம் ஆண்டு முதல் பேட்டிங்கில் பார்த்த தோனியை மீண்டும் பார்க்கப் போகிறோம். எனவே எதிரணிகளுக்கு இது ஒரு நல்ல விஷயமாக இருக்காது” என்று கூறி இருக்கிறார்.