தொடர்ந்து 2 ஹாட்ரிக் விக்கெட்.. பாட் கம்மின்ஸ் அசுரத்தனமான சாதனை.. ஆனால் ஆப்கான் தந்த சோகம்

0
31
Cummins

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியதின் மூலம் பாட் கம்மின்ஸ் உலகக் கிரிக்கெட்டில் புது உலகச் சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதோடு, இந்திய அணியும் அரையிறுதிக்கு தகுதி பெறும், மேலும் முதல் குரூப்பில் இடம்பெற்று இருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இரண்டு அணிகளும் அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிவிடும் என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஆப்கானிஸ்தான் அணிக்கு இதுதான் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. அவர்கள் சேசிங் பிரஷர் இல்லாமல் விளையாடினார்கள். ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஜோடி 118 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மேலும் ஆறு விக்கெட் இழப்புக்கு ஆப்கானிஸ்தான் 148 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. தனியாளாக போராடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்த போதும் இந்த முறை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பந்து வீசிய பாட் கம்மின்ஸ் கரீம் ஜனத், ரஷித் கான், குல்பதின் நைப் என தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். மேலும் கடந்த போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : வெறும் 127 ரன்.. ஆஸியை சுருட்டி ஆப்கான் வரலாற்று வெற்றி.. அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹைட்ரிக் சாதனை படைத்த ஒரே வீரராக பாட் கம்மின்ஸ் சாதனை படைத்திருக்கிறார். மேலும் இதற்கு முன்பாக சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் ஜிம்மி மேத்யூஸ், இலங்கை அணிக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்கள்.