வெறும் 127 ரன்.. ஆஸியை சுருட்டி ஆப்கான் வரலாற்று வெற்றி.. அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

0
720
Afghanistancricket

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கிங்ஸ்டவுன் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி அசத்தி அரையிறுதி வாய்ப்பில் சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஜோடி 15.5 ஓவர் வரையில் நின்று விளையாடியது. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 118 ரன்கள் வந்தது. குர்பாஸ் 49 பந்தில் 60 ரன்கள், இப்ராஹிம் ஜட்ரன் 48 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து கரீம் ஜனத் 9 பந்தில் 13 ரன், முகமது நபி 4 பந்தில் 10*ரன் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 3, ஆடம் ஜாம்பா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 0, டேவிட் வார்னர் 3 ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து மிட்சல் மார்ஸ் 12, ஸ்டோய்னிஸ் 11, டிம் டேவிட் 2, மேத்யூ வேட் 5, கம்மின்ஸ் 3, ஆஸ்டன் அகர் 2, ஜாம்பா 9, ஹேசில்வுட் 5* ரன்கள் எடுத்தார்கள்.

இந்த நிலையில் ஒரு முனையில் தனியாக போராடிய மேக்ஸ்வெல் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நைப் 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க ஒன்னு கணக்கு போட்டோம்.. ஆனா இந்திய பேட்ஸ்மேன்கள் அத மொத்தமா உடைச்சி போட்டுட்டாங்க – நஜ்முல் சாண்டோ பேட்டி

தற்பொழுது நாளை நடைபெறும் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு வர, ஆஸ்திரேலியா வெளியேறிவிடும். அதே சமயத்தில் இது மாற்றி நடந்தால், ஆப்கானிஸ்தான் வெளியேறிவிடும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு வரும். அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டும் தோல்வி அடைந்தால், மூன்று அணிகள் இரண்டு புள்ளிகளில் இருக்கும். அப்பொழுது ரன் ரேட் பார்க்கப்படும்.