பும்ரா அர்ஸ்தீப் கிடையாது.. இவர்கிட்ட முதல் ஓவரை குடுங்க.. இந்த உ.கோ ஹீரோ இவர்தான் – அஸ்வின் அறிவுரை

0
732
Ashwin

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரண்டாவது அரையறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் பந்துவீச்சு வேகம் இந்திய அணிக்கு எப்படி இருக்க வேண்டும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முதல் ஓவரை இடதுகை வேகப் பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் வீசி வருகிறார். சிராஜ் இருந்த பொழுது இரண்டாவது ஓவரையும், அவர் இல்லாத பொழுதும் இரண்டாவது ஓவரை வீசி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு வலது கை பேட்ஸ்மேன்களை துவக்க ஆட்டக்காரர்களாக கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக, இந்தியா எப்படியான பவுலிங் வியூகத்துடன் செல்ல வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்கு விளக்கங்கள் உடன் அறிவுரை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது ” இங்கிலாந்து வேலைக்கு எதிராக முதல் ஓவரை வீச அக்சர் படேல் சிறந்தவராக இருப்பார். அவரிடம் நல்ல ஆர்ம்-பால் இருக்கிறது. மேலும் அவரால் பந்தை மெதுவாகவும் வீச முடியும். இத்தோடு பந்தை ஸ்லைடு செய்யவும் முடியும். பேக் புட்டில் சென்று இங்கிலாந்து ஓபனர்ஸ் விளையாடும் பொழுது அவர்களது பேடில் அடித்து எல்பிடபிள்யு செய்ய முடியும். இங்கிலாந்து ஓபனர்ஸ் பேக் புட்டில் விளையாடக் கூடியவர்கள். இந்த வகையில் அக்சர் படேல் முதல் ஓவரை வீசுவது சரியாக இருக்கும்.

மேலும் அக்சர் படேல் ஜோஸ் பட்லருக்கு எதிராக சிறப்பான முறையில் பந்துவீசி இருக்கிறார். இந்த அடிப்படையில் நீங்கள் அவரை பயன்படுத்தலாம். மேலும் அக்சர் படேலின் உலக கோப்பையாக ஏன் இருக்கக் கூடாது? அவர் இதுவரை முக்கியமான சந்தர்ப்பங்களில் மூன்று முறை இந்திய அணிக்காக இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக வெளிவந்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சிக்ஸ் பேக் கோலி 150 கிலோ தூக்கினாலும்.. ஒரு பேக் ரோகித் செய்ற அந்த வேலையை செய்ய முடியல – கபில்தேவ் பேட்டி

பந்தில் ஸ்விங் இருந்தால் அர்ஸ்தீப் சிங் ஆரம்பிக்கட்டும். அடுத்து பும்ரா பேசட்டும். மேலும் இப்படியான சூழ்நிலை இருக்கும் பொழுது ஹர்திக் பாண்டியா பற்றியும் நாம் யோசிக்கலாம். ஒருவேளை இப்படியான சூழ்நிலை இல்லை என்றால் நேராக அக்சர் படேல் இடம் செல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.